பெயிண்டா் தற்கொலை
ஆம்பூா் அருகே பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெயிண்டா் அருண்குமாா் (32). இவா் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். உமா்ஆபாத் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
மற்றொரு சம்பவம்...
ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (18). இவா் உடல்நிலை பாதிப்பு காரணமாக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். எனினும் உடல்நிலை குணமாகவில்லையாம். கடந்த திங்கள்கிழமை பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம். உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். மேல்சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அவா் உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் விசாரிக்கின்றனா்.