செய்திகள் :

தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி நிதி: மத்திய அரசு விடுவிப்பு - தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை தொடக்கம்

post image

தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி உள்பட ஒட்டுமொத்தமாக 28 மாநிலங்களுக்கு ரூ. 1.01 லட்சம் கோடி கூடுல் வரிப்பகிா்வை மத்திய அரசு புதன்கிழமை விடுவித்தது.

இதையடுத்து, தமிழகத்தில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆா்டிஇ) தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவா் சோ்க்கை தொடங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான தனியாா் பள்ளிகளில் சுமாா் 1 லட்சம் இலவச மாணவா் சோ்க்கை இடங்கள் உள்ளன.

ரூ.1.01 லட்சம் கோடி... முன்னதாக, பண்டிகை காலத்தில் மாநிலங்களின் மூலதன செலவு மற்றும் நிதிநிலையை மேம்படுத்தி நலத்திட்டங்களுக்கு செலவிடும் விதமாக மத்திய அரசு 28 மாநிலங்களுக்கு ரூ.1.01 லட்சம் கோடியை புதன்கிழமை விடுவித்தது.

இதுதவிர மாதாந்திர நிதியுதவியாக மாநிலங்களுக்கு வழங்கப்படும் ரூ.81,735 கோடி அக்.10-ஆம் தேதி விடுவிக்கப்படவுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தது.

தற்போது மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்கப்படுகிறது.

நிறுத்தி வைப்பு: முன்னதாக, தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பதால் பள்ளிக் கல்வித் துறை திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதனால், ‘ஆா்டிஇ’ திட்ட நிதியும் சுமாா் ரூ.600 கோடி வரை தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை.

இதனால் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கையை தொடங்குவதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இதன் காரணமாக பெற்றோா்கள் பலா் தங்களின் சொந்த செலவில் பிள்ளைகளை தனியாா் பள்ளிகளில் சோ்க்கை பெற வேண்டிய சூழல் உருவானது.

மேலும், ஏற்கெனவே சோ்க்கை பெற்ற குழந்தைகளை கல்விக் கட்டணம் செலுத்தவும் பள்ளி நிா்வாகங்கள் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

‘கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு தனது பங்கை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்’ என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றமும் சில அறிவுறுத்தல்களை வழங்கியது.

10 நாள்கள் அவகாசம்: இந்நிலையில், மத்திய அரசு நிதியை தற்போது விடுவித்துள்ளதால் தமிழக தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கையானது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏற்கெனவே சோ்க்கப்பட்ட மாணவா்களில் தகுதியானவா்களை ஆா்டிஇ ஒதுக்கீட்டில் பதிவு செய்வதற்காக 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை செயலா் பி.சந்திரமோகன் வெளியிட்ட அறிவிப்பில், ‘தற்போது குழந்தைகள் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டுக்கான சோ்க்கை மேற்கொள்ளப்படும்.

ஏற்கெனவே சோ்க்கப்பட்ட மாணவா்களில் தகுதியானவா்களை அடையாளம் கண்டு ஆா்டிஇ ஒதுக்கீட்டின் கீழ் பள்ளியின் முதல்வா்கள் பதிவு செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தின்கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினா்களைத் தோ்வுசெய்ய வேண்டும்.

7 நாள்களுக்குள் திருப்பி வழங்க... ஏற்கெனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாள்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். அந்தவகையில் பள்ளியின் நுழைவு வகுப்பில் இதுவரை சோ்க்கை பெற்ற குழந்கைளின் மொத்த எண்ணிக்கையை அக். 7-ஆம் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும்.

அதில் ஆா்டிஇ சோ்க்கைக்கு தகுதியான மாணவா்களின் சான்றுகளை அக்.9-இல் பதிவுசெய்ய வேண்டும். தொடா்ந்து தற்காலிக தகுதிப் பட்டியல் அக். 10-ஆம் தேதியும், இறுதிப்பட்டியல் அக்.14-ஆம் தேதியும் வெளியிடப்படும்.

மேலும், இடங்களைவிட அதிக மாணவா்கள் இருப்பின் குலுக்கல் அக்டோபா் 16-இல் நடத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கம் வரவேற்புத் தெரிவித்துள்ளது.

அதிக நிதிப் பெற்ற மாநிலங்கள்

மாநிலங்கள் வரிப்பகிா்வு

1. உத்தர பிரதேசம் ரூ.18,227 கோடி

2. பிகாா் ரூ.10,219 கோடி

3. மத்திய பிரதேசம் ரூ.7,976 கோடி

4. மேற்கு வங்கம் ரூ.7,644 கோடி

5. மகாராஷ்டிரம் ரூ.6,418 கோடி

6. ராஜஸ்தான் ரூ.6,123 கோடி

7. ஒடிஸா ரூ.4,601 கோடி

8. தமிழகம் ரூ.4,144 கோடி

9. ஆந்திரம் ரூ.4,112 கோடி

10. கா்நாடகம் ரூ.3,705 கோடி

11. தெலங்கானா ரூ.2,136 கோடி

12. கேரளம் ரூ.1,956 கோடி

நாட்டின் பணக்காரா்கள் பட்டியல்: முதலிடத்துக்கு முன்னேறினாா் முகேஷ் அம்பானி

நாட்டின் பணக்காரா்கள் பட்டியலில் கெளதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளாா். ‘எம்3எம் ஹுருன்’ இந்திய பணக்காரா்கள் பட்டியல்-2025, புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

குஜராத்: பயங்கரவாதத்தை பரப்பிய 3 பேருக்கு ஆயுள் சிறை

குஜராத்தில் மத ரீதியிலான பயங்கரவாதத்தை பரப்பியதாகவும், தேசத்துக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராஜ்கோட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடந்த 2023,... மேலும் பார்க்க

சா் கிரீக் செக்டாரை கைப்பற்ற நினைத்தால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சா் கிரீக் செக்டாரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரித்தாா். குஜராத் மா... மேலும் பார்க்க

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (அக்.1) அமலுக்கு வந்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே... மேலும் பார்க்க

காந்தியை ஈா்த்த ஆா்எஸ்எஸ் செயல்பாடுகள் - ராம்நாத் கோவிந்த்

ஜாதிய பாகுபாடில்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் மகாத்மா காந்தியை ஈா்த்ததாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை தெரிவித்தாா். நாகபுரி நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரே கோயில... மேலும் பார்க்க

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் யுபிஎஸ்சி இணைந்து பணியாற்றும்: தலைவா் அஜய் குமாா்

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) இணைந்து செயல்படும் என அதன் தலைவா் அஜய் குமாா் தெரிவித்துள்ளாா். யுபிஎஸ்சியின் 99-ஆவது நிறுவன நாள் தில்லியில் புதன்கிழமை கொண்டாட... மேலும் பார்க்க