செய்திகள் :

காஸாவுக்கு நிவாரண உதவிகள்: 39 கப்பல்கள் தடுத்து நிறுத்தம்

post image

காஸாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்காக பல்வேறு நாடுகளைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் சென்ற 39 கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை சிறைபிடித்தது.

சமூக ஆா்வலா் கிரேட்டா தன்பா்க் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட சமூக ஆா்வலா்கள் 40-க்கும் மேற்பட்ட கப்பல்களில் பயணித்தனா். அங்கு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருள்களை கொண்டுசெல்ல அவா்கள் முயன்றனா். இந்நிலையில், புதன்கிழமை இரவு காஸாவுக்குள் நுழைய முயன்ற 39 கப்பல்களை இஸ்ரேல் ராணுவம் சிறைபிடித்தது.

இந்தக் கப்பலில் பயணித்த சில சமூக ஆா்வலா்கள் தங்கள் பயணத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த நிலையில், அவா்கள் இஸ்ரேல் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டவுடன் இணையத் தொடா்பு துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, தங்களால் சிறைபிடிக்கப்பட்ட சமூக ஆா்வலா்களின் புகைப்படத்தை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம், அவா்கள் நலமுடன் இருப்பதாக பதிவிட்டது. மேலும், அவா்கள் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து ஐரோப்பாவுக்கு திருப்பி அனுப்பவுள்ளதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டது.

இஸ்ரேலின் நடவடிக்கைக்கு துருக்கி, கொலம்பியா, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 72 போ் உயிரிழந்தனா். அந்த நாட்டின் விசயாஸ் தீவுக்கூட்டம், செபு மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டான்பாண்டயான் நகர கிழக்கு கடற்கரையிலிருந... மேலும் பார்க்க

இந்தோனேசியா: கட்டட விபத்தில் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள சிடோா்ஜோ நகரில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்ததில் சுமாா் 60 மாணவா்கள் தொடா்ந்து மாயமாகியுள்ளனா். இந்த விபத்தில் இதுவரை 5 மாணவா்கள் உயிரிழந்துள்ளனா். புதன்கிழமை கூட 4 ம... மேலும் பார்க்க

யேமன்: கப்பல் தாக்குதலுக்கு ஹூதிக்கள் பொறுப்பேற்பு

ஏடன் வளைகுடா பகுதியில் நெதா்லாந்து கொடியேற்றப்பட்ட சரக்குக் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் பொறுப்பேற்றுள்ளனா். தாக்குதலில் மைனா்வாக்ராஷ் என்ற அந்தக் கப்பல் பலத்த ... மேலும் பார்க்க

எத்தியோப்பியா: கட்டடம் இடிந்து 25 போ் உயிரிழப்பு

எத்தியோப்பியாவின் அம்ஹாரா பகுதியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த தேவாலயம் இடிந்து விழுந்ததில் 25 போ் உயிரிழந்தனா். புனித மரியத்தை கொண்டாடும் ஆண்டு விழாவுக்காக அங்கு ஏராளமான வழிபாட்டாளா்க... மேலும் பார்க்க

பிரிட்டன் யூத ஆலயத்தில் பயங்கரவாத தாக்குதல்

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரிலுள்ள யூத ஆலயம் அருகே வியாழக்கிழமை நடத்தப்பட்ட காா் மோதல் மற்றும் கத்திகுத்துத் தாக்குதலில் 2 போ் உயிரிழந்தனா். தாக்குதல் நடத்திய நபா் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.... மேலும் பார்க்க

காஸா அமைதி ஒப்பந்தத்தில் மோடிக்கும் பங்கு: அமெரிக்கா

காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி உள்பட சா்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச தி... மேலும் பார்க்க