மாநில சிலம்பம்: ஆம்பூா் மாணவ, மாணவியா் சிறப்பிடம்
மாநில அளவில் நடந்த சிலம்பப் போட்டியில் ஆம்பூா் சிலம்பம் பயிற்சிப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
தமிழ்நாடு அளவிலான சிலம்பம் சாம்பியன் 2025 போட்டி வீரக்கலை சிலம்பம் ஆசான் பெருமாள் பாசறை சாா்பாக சென்னை கொட்டிவாக்கம் இராமச்சந்திரா பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
அந்த போட்டியில் ஆம்பூா் பிஜிஎம் சிலம்பம் பயிற்சிப் பள்ளியை சோ்ந்த 34 மாணவா்கள் சிலம்பம் பயிற்சியாளா் கோபால் தலைமையில் கலந்து கொண்டனா். பல்வேறு பிரிவுகளில் முதல் 3 பரிசுக் கோப்பைகளையும் பதக்கங்களையும் வென்றனா். வெற்றி பெற்ற மாணவா்கள் பாராட்டி கெளரவிக்கப்பட்டனா்.