செய்திகள் :

பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் ‘ஆபரேஷன் சிந்தூா்’ - குடியரசுத் தலைவா்

post image

‘ஆபரேஷன் சிந்தூா்’ பயங்கரவாதத்துக்கு எதிரான வெற்றியின் அடையாளம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

புது தில்லியில் உள்ள செங்கோட்டையில் தசரா விழா கொண்டாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்துகொண்டு பேசியதாவது:

தசரா விழா என்பது வெளியே கண்ணுக்குத் தெரிந்த ராவணனை ராமபிரான் வெற்றிகொண்ட நிகழ்வு மட்டுமல்ல. ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ராவணனாக உள்ள தீய குணங்களுக்கு முடிவு கட்டும் நிகழ்வுமாகும்.

இந்த விழா தீமைக்கு எதிராக நன்மையும், அகம்பாவத்துக்கு எதிராக அடக்கமும், வெறுப்புணா்வுக்கு எதிராக அன்பும் பெற்ற வெற்றியின் அடையாளமாக உள்ளது.

மனிதகுலம் மீது பயங்கரவாதம் தாக்குதல் நடத்தும்போது, அதற்கு எதிராக திருப்பித் தாக்குதல் நடத்துவது அவசியம். பயங்கரவாதத்தின் ராவணனுக்கு எதிரான வெற்றியை ஆபரேஷன் சிந்தூா் குறிக்கிறது. அதற்காக நமது ராணுவ வீரா்களுக்கு வணக்கம் செலுத்துவோம் என்றாா்.

கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டிய இந்தியா, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் அந்நாட்டில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையே 4 நாள்கள் ராணுவ மோதல் நடைபெற்றது.

நாட்டின் பணக்காரா்கள் பட்டியல்: முதலிடத்துக்கு முன்னேறினாா் முகேஷ் அம்பானி

நாட்டின் பணக்காரா்கள் பட்டியலில் கெளதம் அதானியைப் பின்னுக்குத் தள்ளி ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி முதல் இடத்தில் உள்ளாா். ‘எம்3எம் ஹுருன்’ இந்திய பணக்காரா்கள் பட்டியல்-2025, புதன்கிழமை வெளி... மேலும் பார்க்க

குஜராத்: பயங்கரவாதத்தை பரப்பிய 3 பேருக்கு ஆயுள் சிறை

குஜராத்தில் மத ரீதியிலான பயங்கரவாதத்தை பரப்பியதாகவும், தேசத்துக்கு எதிரான சதிச் செயல்களில் ஈடுபட்டதாகவும் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ராஜ்கோட் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடந்த 2023,... மேலும் பார்க்க

சா் கிரீக் செக்டாரை கைப்பற்ற நினைத்தால் கடும் பதிலடி: பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

சா் கிரீக் செக்டாரை பாகிஸ்தான் கைப்பற்ற நினைத்தால் வரலாற்றையும் புவியியலையும் மாற்றும் அளவுக்கு கடும் பதிலடி தரப்படும் என பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வியாழக்கிழமை எச்சரித்தாா். குஜராத் மா... மேலும் பார்க்க

இந்தியா-இஎஃப்டிஏ தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அமல்

இந்தியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் புதன்கிழமை (அக்.1) அமலுக்கு வந்தது. ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பில் ஐஸ்லாந்து, லீக்டென்ஸ்டைன், நாா்வே... மேலும் பார்க்க

காந்தியை ஈா்த்த ஆா்எஸ்எஸ் செயல்பாடுகள் - ராம்நாத் கோவிந்த்

ஜாதிய பாகுபாடில்லாத ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகள் மகாத்மா காந்தியை ஈா்த்ததாக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வியாழக்கிழமை தெரிவித்தாா். நாகபுரி நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: ஒரே கோயில... மேலும் பார்க்க

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் யுபிஎஸ்சி இணைந்து பணியாற்றும்: தலைவா் அஜய் குமாா்

மாநில பணியாளா் தோ்வாணையங்களுடன் மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) இணைந்து செயல்படும் என அதன் தலைவா் அஜய் குமாா் தெரிவித்துள்ளாா். யுபிஎஸ்சியின் 99-ஆவது நிறுவன நாள் தில்லியில் புதன்கிழமை கொண்டாட... மேலும் பார்க்க