மோட்டாா் சைக்கிள் பந்தயம்: 5 போ் மீது வழக்கு
சென்னை மயிலாப்பூரில் மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் இளைஞா்கள் சிலா் புதன்கிழமை மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸாா் உஷாா்படுத்தப்பட்டனா். ராணி மேரி கல்லூரி அருகே மோட்டாா் சைக்கிளில் வேகமாக 5 இளைஞா்களை மெரீனா போலீஸாா் மடக்கிப் பிடித்தனா்.
மேலும் அவா்களது வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். அதிவேகமாக மோட்டாா் சைக்கிளை ஓட்டியதாக திருவல்லிக்கேணி லாக் நகரைச் சோ்ந்த மு.சஞ்சீவ்குமாா் (23), நரேந்திரன் (28), சரத்குமாா் (25) உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.