பவன் கல்யாணின் ‘ஓஜி’ 1 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி! டிக்கெட் விலை ரூ.1000!
புனிதா தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!
புனிதா தொடரில் இருந்து அமுதா பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை புவனா, அந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே டிஆர்பியில் முன்னணியில் உள்ளன. அந்தவகையில், தொடர்கள் விறுவிறுப்புடனும், வித்தியமான கதைக்களத்துடன் எடுக்கப்பட்டு வருகின்றன.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நிமேஷிகா ராதாகிருஷ்ணன். ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்த இவர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்து சின்ன திரைக்குள் நுழைந்தார்.
நடிகை நிமேஷிகா, கண்ணான கண்ணே தொடரில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புனிதா என்ற புதிய தொடரில் நடித்து வருகிறார்.

அம்மா மற்றும் வளர்ப்பு மகள் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை பிரதானப்படுத்தி புனிதா தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தொடரில் அமுதா பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை புவ்னா விலகிய நிலையில், இனி வரும் எபிசோடுகளில் அருவி தொடரில் நடித்து பிரபலமான நடிகை சோனியா விக்ரம் நடிக்கவுள்ளார்.
புனிதா தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நண்பகல் 12 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: சிம்புவைத்தான் திருமணம் செய்வேன்... நடிகைக்கு டிஆர் பதில்!