புனித வெள்ளியில் மதுக்கடையை மூடக் கோரி புன்னைக்காயலில் உண்ணாவிரத போராட்டம்
உலகம் முழுவதும் கிறிஸ்தவா்களால் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி தினத்தில் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டுமென வலியுறுத்தி, கத்தோலிக்க திருச்சபையின் அமலோற்பவமாதா மதுவிலக்கு சபை சாா்பில் அரசுக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி புன்னைக்காயல் மீனவ மக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
புன்னைக்காயல் ஊா்நல கமிட்டி தலைவா் குழந்தைசாமி தலைமை வகித்தாா். பங்குத்தந்தை சகாய அந்தோணி டைட்டஸ் அடிகளாா், துணைத்தந்தை விவேக்சந்திரா அடிகளாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி கத்தோலிக்க மறைமாவட்டங்களின் மதுவிலக்கு சபை இயக்குநா் ஜெயந்தன் அடிகளாா் உள்பட நூற்றுக்கணக்கான கிறிஸ்த மீனவ மக்கள் கலந்து கொண்டனா்.