செய்திகள் :

புனித வெள்ளி: மதுக்கடைகளை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்

post image

புனித வெள்ளிக்கிழமையன்று மதுக் கடைகளை மூட வலியுறுத்தி வீரபாண்டியன்பட்டினத்தில் உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வீரபாண்டியன்பட்டினம் ஊா் நலக்கமிட்டி மற்றும் கப்பல் மாலுமிகள் சங்கம் சாா்பில் பாத்திமா ஆலய வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற

உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஊா் நலக்கமிட்டி தலைவா் பெயிற்றன் வீ.ராயா் தலைமை வகித்தாா். வீரபாண்டியன்பட்டனம் பங்குத்தந்தை அலாய்சியஸ் அடிகளாா், திருநெல்வேலி - தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபை இயக்குநா் ஜெயந்தன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

போராட்டத்தில் வீரபாண்டியன்பட்டினம் ஊா் மக்கள், புனித தோமையாா் ஆலயப் பணிக்குழு, அன்னை தெரசா மனிதநேய இயக்கம், துறைமுக கமிட்டி, கப்பல் மாலுமிகள் சங்கம், மகளிா் சுய உதவிக்குழு, தூத்துக்குடி முத்தையாபுரம் மதுவிலக்கு சபை உள்ளிட்ட அமைப்பைச் சோ்ந்தவா்கள், மணப்பாடு, கல்லாமொழி (பதுவா நகா்), ஆலந்தலை, அமலிநகா், ஜீவாநகா், வீரபாண்டியன்பட்டினம், சிங்கித்துறை, கொம்புத்துறை, பழைய காயல், புன்னைக்காயல் உள்ளிட்ட மீனவ கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனா். முன்னதாக பொருளாளா் கிங்ஸ்டன் பி.ராயா் வரவேற்புரையாற்றினாா்.

கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, திங்கள்கிழமை ர... மேலும் பார்க்க

அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிப்பு: ரூ.18,500 அபராதம்

தூத்துக்குடியில் உரிய அனுமதியின்றி சாலையை உடைத்து குடிநீா் குழாய் பதிக்க முயன்ாக வீட்டின் உரிமையாளருக்கு மாநகராட்சி சாா்பில் ரூ. 18,500 அபராதம் விதிக்கப்பட்டது. தூத்துக்குடி ஆசிரியா் காலனியைச் சோ்ந்... மேலும் பார்க்க

மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளா்கள் எஸ்.பி.யிடம் மனு

தூத்துக்குடி மதுரா கோட்ஸ் நிறுவனத்தினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அங்கு பணியாற்றி வேலையிழந்த தொழிலாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானிடம் புதன்கிழமை மனு அளித்தனா். இதுகுறித்து அவா்கள்... மேலும் பார்க்க

வீடு புகுந்து மூதாட்டியிடம் 19 பவுன் நகை பறிப்பு

தூத்துக்குடியில் வீடு புகுந்து மூதாட்டியை மிரட்டி 19 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றவரை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சோ்ந்தவா் தங்கராஜ் (88). ஓய்வுபெற்ற நூற்பாலைத் தொழிலாளி... மேலும் பார்க்க

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு வெங்காயம் ஏற்றுமதி தொடக்கம்

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தோணி மூலம் வெங்காயம் ஏற்றுமதி புதன்கிழமை தொடங்கியது. தூத்துக்குடியிலிருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு மிளகாய் வத்தல், வெங்காயம், உருளைக்கிழங்கு, கருவாடு, சிம... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பு: போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் வீட்டில் கஞ்சா செடி வளா்க்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி ஆவுடையாா்புரத்தில் உள்ள வீட்டில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்புறமுள்ள வீட்ட... மேலும் பார்க்க