செய்திகள் :

பும்ராவுக்கு பணிச் சுமையா? புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன?

post image

இந்திய வேகப் பந்துவீச்சாளர் பும்ராவின் பணிச்சுமை மிகவும் முக்கியமான பேசுபொருளாக மாறியிருப்பது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிஜிடி தொடரில் ஜஸ்பிரீத் பும்ரா அதிகமான ஓவர்கள் வீசியதால் அவருக்கு முதுகுப் பகுதியில் வலி ஏற்பட்டது. அதனால், கடைசி டெஸ்ட்டில் இரண்டாம் இன்னிங்ஸில் பந்துவீசாமல் வெளியேறினார்.

இந்திய அணி அந்தத் தொடரில் 3-1 என தோல்வியடைந்தது. அதனால், இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வாய்ப்பில்லாமல் சென்றது.

தற்போது, இங்கிலாந்துடன் இந்திய அணி 1-2 என தொடரில் பின்னிலையில் இருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளில் பும்ரா எந்தப் போட்டியில் விளையாடுவார் எனத் தெரியவில்லை. நான்காவது டெஸ்ட்டில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பணிச் சுமை காரணமாக மொத்தம் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாட இருப்பதாக முன்னமே கூறப்பட்டது.

ஜன.2024 முதல் அதிக ஓவர்கள் வீசியவர்கள்

1. ஜஸ்ப்ரீத் பும்ரா - 483. 2 ஓவர்கள் - 100 விக்கெட்டுகள் (இந்தியா)

2. மிட்செல் ஸ்டார்க் - 481.2 ஓவர்கள் - 74 விக்கெட்டுகள் (ஆஸி.)

3. முகமது சிராஜ் - 468.3 ஓவர்கள் - 57 விக்கெட்டுகள் (இந்தியா)

குறைவான போட்டிகளில் அதிக ஓவர்கள்

இந்தப் பட்டியலில் பும்ரா 483 ஓவர்களை 39 இன்னிங்ஸில் வீசியுள்ளார். மிட்செல் ஸ்டார்க் 45 இன்னிங்ஸில் 481 ஓவர்கள் வீசியுள்ளார்.

இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது பும்ரா குறைவான இன்னிங்ஸ்களில் கூடுதலாகவே பந்து வீசியுள்ளதால் அவருக்கு பணிச்சுமை இருப்பது தெளிவாக தெரிகிறது.

கடைசி டெஸ்ட்டில் ஒரே ஸ்பெல்லில் 9 ஓவர்கள் வீசிய பென் ஸ்டோக்ஸுக்கு இல்லாத பணிச்சுமையா பும்ராவுக்கு? என முன்னாள் இந்திய வீரர் இர்ஃபான் பதான் விமர்சித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Indian fast bowler Bumrah's workload has become a major talking point, drawing criticism from fans.

ஆஸி.க்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 தொட... மேலும் பார்க்க

முத்தரப்பு டி20 தொடர்: நியூசி.க்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே!

முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் எடுத்துள்ளது.ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றைய... மேலும் பார்க்க

முத்தரப்பு டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து ஆல்ரவுண்டர் விலகல்!

ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் விலகியுள்ளார்.ஜிம்பாப்வே, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 ... மேலும் பார்க்க

இந்திய அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர்; பாராட்டு மழையில் ரவீந்திர ஜடேஜா!

இந்திய அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர் என ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உள்பட பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ... மேலும் பார்க்க

13,000 டி20 ரன்களை கடந்த பட்லர்..! விரைவில் உலக சாதனை படைப்பாரா?

இங்கிலாந்து வீரர் ஜாஸ் பட்லர் டி20 போட்டிகளில் 13,000 ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இங்கிலாந்தில் நடைபெறும் விடாலிட்டி பிளாஸ்ட் மென் டி20 தொடரில் லங்காஷயர் அணியும் யார்க்‌ஷியர் அணியும் மோ... மேலும் பார்க்க

இளவரசி ஸ்மிருதி மந்தனா..! பிறந்த நாளுக்கு குவியும் வாழ்த்துகள்!

இந்தியாவின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ள ஸ்மிருதி மந்தனா மும்பையில் பிறந்தவர். இடதுகை பேட... மேலும் பார்க்க