வேலூர்: திறப்பு விழா நடத்தியும் திறக்கப்படாத கல்லூரி மாணவிகள் விடுதி! - அதிகாரிக...
புயல் பாதிப்பு: மக்களவையில் விவாதிக்க ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்த டி.ஆர். பாலு!!
ஃபென்ஜால் புயல் பாதிப்புகள் குறித்து விவாதிக்கக் கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை திமுக எம்பி டி.ஆர்.பாலு திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு 10.30 மணி முதல் 11.30 மணியளவில் மரக்காணம், புதுச்சேரி இடையே கரை கடந்தது. அதையடுத்து விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டியது.
அதிகனமழை மற்றும் காற்றின் காரணமாக சாலைகள் மற்றும் விவசாய நிலங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வடதமிழக கடலோர மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
இதையும் படிக்க : பல்லவன், வைகை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் இன்று ரத்து!
இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு புயல் பாதிப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.
அந்த நோட்டீஸில், மழை பாதிப்பை கணக்கிட மத்திய அரசின் குழுவை அனுப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.