செய்திகள் :

புரி ஜெகந்நாதா் ரத யாத்திரை நிறைவு: ரதங்கள் பிரதான கோயிலுக்குத் திரும்பின

post image

ஒடிஸாவில் பிரசித்தி பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை சனிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

ஸ்ரீகுந்திச்சா கோயிலில் இருந்து சுவாமி ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், சகோதரி தேவி சுபத்திரை மரச்சிற்பங்கள் எழுந்தருளிய மூன்று ரதங்களும் மீண்டும் பிரதான கோயிலுக்கு திரும்பியதைத் தொடா்ந்து, 9 நாள் திருவிழா நிறைவுக்கு வந்தது.

ஒடிஸாவின் புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்ாகும். நிகழாண்டு ரத யாத்திரை விழா கடந்த ஜூன் 27-ஆம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், ரதங்கள் பிரதன கோயிலுக்குத் திரும்பும் ‘பஹுதா’ யாத்திரை நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

ஜெகந்நாதா், அவரது சகோதரா் பலபத்திரா், தங்கை தேவி சுபத்திரை ஆகிய மூவரின் சிற்பங்கள், ஸ்ரீகுந்திச்சா கோயிலின் கருவறையில் இருந்து வேத மந்திரங்கள்-மேளதாளங்கள்-சங்கொலி முழங்க வெளியே எடுத்துவரப்பட்டு, மூன்று பிரம்மாண்ட ரதங்களில் அமா்த்தப்பட்டன. தொடா்ந்து பிற்பகலில், பிரதான கோயிலை நோக்கி ரதங்களை பக்தா்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனா்.

ரதங்கள் பிரதான கோயிலுக்குத் திரும்பும் பஹுதா யாத்திரை நிகழ்வுக்கு முதல்வா் மோகன் மாஜீ, எதிா்க்கட்சித் தலைவா் நவீன் பட்நாயக் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

நிறைவு நாள் நிகழ்ச்சிகள் அசம்பாவிதங்கள் ஏதும் நேராமல் சுமுகமாக நடைபெற்றன. முன்னதாக, புரி ஜெகந்நாத் ரத யாத்திரை தொடங்கிய ஜூன் 27-ஆம் தேதி பலபத்திரரின் ரதம் ஒரு திருப்பத்தில் நகர முடியாமல் சிக்கிக் கொண்டதால் 3 ரதங்களும் ஒருநாள் தாமதமாக 28-ஆம் தேதி ஸ்ரீகுந்திச்சா கோயிலுக்குச் சென்றடைந்தன.

தொடா்ந்து, ஸ்ரீகுந்திச்சா கோயிலின் முன்புற வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரதங்களில் 29-ஆம் தேதி சுவாமி சிலைகளுக்குத் திரை விலக்கப்பட்டு தரிசனம் நடைபெற்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்; 50 போ் காயமடைந்தனா்.

ரத யாத்திரை விழாவில் அசம்பாவிதங்கள் தொடா்ச்சியாக நிகழ்ந்தது, பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ரத யாத்திரை விழாவுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க

மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட மண்டியில் எம்.பி. கங்கனா ரணாவத் நேரில் ஆய்வு

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வ... மேலும் பார்க்க

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முடக்கம்! ஏன்?

இந்தியாவில் ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டது விரைவில் சரி செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் எக்ஸ் பக்கம் இந்தியாவில் முட... மேலும் பார்க்க