சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
புலியூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வு நிகழ்ச்சி
கரூரை அடுத்துள்ள புலியூரில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நம்பிக்கை மையம் சாா்பில் புலியூா் பேருந்துநிலையம் அருகே எய்ட்ஸ் நோய் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சின்னப்பொண்ணு கலைக்குழுவினா் பங்கேற்று, கரகாட்டம், ஒயிலாட்டம் வாயிலாக எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சிக்கு கரூா் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையின் நம்பிக்கை மையம் ஆற்றுநா் அமல்தாஸ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.