புஷ்பா - 2 புதிய வடிவம் வெளியாவதில் தாமதம்!
கூடுதல் காட்சிகளுடன் திட்டமிடப்பட்ட புஷ்பா - 2 புதிய வடிவத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் உலகளவில் ரூ.1,831 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டரான புஷ்பா 2 ராஜமௌலியின் பாகுபலி - 2 வசூலான ரூ. 1790 கோடியைக் கடந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: டென் ஹவர்ஸ் டிரைலர்!
தொடர்ந்து, ஜன. 11 ஆம் தேதி முதல் புஷ்பா - 2 படத்தின் நீக்கப்பட்ட 20 நிமிடக் காட்சிகள் மீண்டும் சேர்க்கப்பட்டு திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
தற்போது, தொழில்நுட்ப சிக்கலால் புதிய வடிவம் ஜன. 17 ஆம் தேதி முதல் திரையிடப்படும் என தெரிவித்துள்ளனர். முன்னதாக 3.15 மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படமாக இருந்த புஷ்பா - 2 இனி 3.35 மணிநேரம் கொண்ட திரைப்படமாகவுள்ளது.
நடிகர் ராம் சரண் நடித்த கேம் சேஞ்ஜர் திரைப்படம் நாளை (ஜன. 10) வெளியாகவுள்ளதால் புஷ்பா - 2 புதிய வடிவத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.