பூஜாவின் ஆட்டத்திற்கு போட்டியே இல்லை!
நடிகை பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் தொடர்ந்து இணையத்தைக் கலக்கி வருகிறது.
கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதற்கான இடம் நடிகைகளுக்கு அபூர்வமாகவே அமைகின்றன. பெரும்பாலும், உடல்மொழியிலோ அல்லது நடனத்திலேயோ ரசிகர்களைக் கவர்ந்தால் உண்டு.
அப்படி, நடிகை பூஜா ஹெக்டே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இன்ஸ்டா உள்பட சமூக வலைதளங்களில் ரெட்ரோ படத்தில் இடம்பெற்ற கன்னிமா பாடலால் வைரலில் உள்ளார்.
அப்பாடலில், குறிப்பிட்ட வரிகளில் பூஜா ஹெக்டே அழகான நடனத்துடன் நளிமான பாவனைகளையும் செய்திருப்பார். இது ரசிகர்களிடம் அட்டகாசமான வரவேற்பைப் பெற்றது.
இதனால், பலரும் இதே பாடலுக்கு பூஜா ஆடியதுபோலவே நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டனர். ஆனால், இப்போது வரை பூஜாவின் அசைவுகளை யாராலும் முறியடிக்க முடியவில்லை.
கன்னிமா என்றாலே பூஜா ஹெக்டேவின் முகம்தான் முதலில் நினைவுக்கு வருகிறது என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் இருப்பதால் ‘காவாலா’ நடனத்தில் தமன்னாவுக்கு பெயர் கிடைத்ததுபோல் ரெட்ரோவில் பூஜா ஜெக்டோவுக்கு அமைந்திருக்கிறது.
#PoojaHegde recreating the trendy Kanimaa steps in #RetroAudioLaunch#RetroFromMay1#Retropic.twitter.com/lNsGpJTfht
— k (@Gabbafied) April 18, 2025
பல இடங்களில் பூஜா ஹெக்டே இந்த நடனத்தை ஆடினாலும் நேற்று (ஏப். 18) ரெட்ரோ இசைவெளியீட்டு விழாவில் மேடையில் நடனமாடி பலரையும் ஈர்த்துள்ளார்.
இதையும் படிக்க: என் வாழ்க்கை நோக்கம் இதுதான்: சூர்யா