செய்திகள் :

பூண்டி ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு! வெள்ள அபாய எச்சரிக்கை!!

post image

பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5,000 கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் கொசஸ்தலையாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

சென்னையின் குடிநீர் வழக்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

நீர்த்தேக்கத்தின் நீர்மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடியாகும். இன்றைய நிலவரப்படி (12.12.2024) நீர் இருப்பு 3,434 அடியாகவும் கொள்ளளவு 2,931 மில்லியன் கன அடியாகவும் உள்ளது.

இதையும் படிக்க | கபூர் குடும்பத்தினருடன் மோடி; பாதிக்கப்பட்டவர்களுடன் ராகுல்! - விமர்சிக்கும் காங்கிரஸ்!

சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம். பூண்டியில் நீர் வரத்து பிற்பகல் 2.00 மணி நிலவரப்படி 3,500 கன அடியாக உள்ளது. தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும் நீர்வரத்து தொடர்ச்சியாக உயர்வதாலும் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 12.12.2024 பிற்பகல் 1.30 மணி அளவில் விநாடிக்கு 1,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

தற்போது பருவமழையினால் நீர்வரத்து தொடர்ச்சியாக உள்ளதால் பூண்டி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் கூடுதலாக இன்று 12.12.2024 மாலை 5.00 மணி அளவில் விநாடிக்கு 5,000 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.

இதையும் படிக்க |ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து படிப்படியாக மழை குறையும்: பாலச்சந்திரன்

எனவே, நீர்த்தேக்கத்திலிருத்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம். ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு, கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர், தாமரைப்பாக்கம், திருக்கண்டலம், ஆத்தூர், பண்டிக்காவனுர், ஜெகநாதபுரம், புதுகுப்பம், கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம், மடியூர், சீமாவரம், வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம், இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர், சடையான்குப்பம், எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை! எங்கெல்லாம்?

கனமழை காரணமாக நெல்லை, தென்காசி பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை (டிச.13) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதன்கிழமை (டிச.... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்தில் 33 மாவட்டங்களுக்கு மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுக்குறையும்: பாலச்சந்திரன்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது வலுக்குறையும் என வானிலை ஆய்வு மையம் தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பாலச்சந்திரன் கூறுகையில், நேற்று இலங்... மேலும் பார்க்க

தர்மயுகத்தை நோக்கி நாட்டை வழி நடத்துகிறார் பிரதமர் மோடி: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

நாகர்கோவில்: தர்மயுகத்தை நோக்கி இந்தியாவை வழிநடத்தி செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்றார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற அகிலத்திரட்டு அம்மான... மேலும் பார்க்க

தென் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

தென் மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத... மேலும் பார்க்க

சென்னையில் மாலைக்குப் பின் மழை இருக்காது!

தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர... மேலும் பார்க்க