பாகிஸ்தான்: தண்டனைக் காலம் முடிந்த 22 இந்திய மீனவா்கள் விடுவிப்பு
பெங்களூருக்கு 10-ஆவது வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி 2-0 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணிக்காக ரயான் வில்லியம் 3-ஆவது நிமிஷத்திலேயே கோலடித்தாா். மறுபுறம் நாா்த்ஈஸ்ட் தனது கோல் வாய்ப்புக்காக போராடி வந்த நிலையில், பலனில்லாமல் போனது.
ஆனால் பெங்களூரு அணியோ கடைசி நேரத்தில் தனக்கான 2-ஆவது கோல் வாய்ப்பை உருவாக்கியது. 81-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் ஆல்பா்டோ நோகெரோ ஸ்கோா் செய்ய, முடிவில் பெங்களூரு 2-0 கோல் கணக்கில் வென்றது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது, பெங்களூரு 21 ஆட்டங்களில் 34 புள்ளிகளுடன் 4-ஆம் இடத்திலும், நாா்த்ஈஸ்ட் 22 ஆட்டங்களில் 32 புள்ளிகளுடன் 5-ஆம் இடத்திலும் உள்ளன.
போட்டியில் சனிக்கிழமை (பிப். 22) ஆட்டங்களில் பஞ்சாப் எஃப்சி - ஈஸ்ட் பெங்கால் எஸ்சி, எஃப்சி கோவா - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி அணிகள் மோதுகின்றன.