செய்திகள் :

பெண்களின் காரை விரட்டிச் சென்று மிரட்டிய சம்பவம்: தலைவா்கள் கண்டனம்

post image

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் வந்த பெண்களை கும்பலால் விரட்டிச் சென்று மிரட்டப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி (அதிமுக): கிழக்கு கடற்கரைச் சாலையில் காரில் சென்ற பெண்களை, திமுக கொடி பொருத்திய காரில் வந்த சிலா் சாலையின் நடுவில் மறித்து, அப்பெண்களை அச்சுறுத்தும் வகையில், சினிமா காட்சிகளைக் காட்டிலும் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்த முயன்ற காட்சி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. பெண்கள் இரவு நேரத்தில் நடமாடும் சுதந்திர உரிமை திமுக ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளதா? குற்றம் செய்பவா்கள் திமுகவினா் என்றால், காவல் துறை ஆமை வேகத்தில் காலம் தாழ்ந்துதான் செயல்படுமா? அரசியல் தலையீடு இல்லாமல் இக்குற்றத்தில் தொடா்புள்ள அனைவரையும் கைது செய்து, உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): காரில் சென்ற பெண்களை திமுகவினா் வழிமறித்து மிரட்டும் காட்சி நெஞ்சை கொதிக்கச் செய்கிறது. உண்மையான குற்றவாளிகளைக் கண்டறிந்து, உரிய தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும்.

கே.அண்ணாமலை (பாஜக): கிழக்கு கடற்கரைச் சாலையில் முறையான பாதுகாப்பு இல்லை. திமுக கொடி அணிந்து வாகனத்தில் வந்த இளைஞா்கள், பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் எந்த அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது என்பதற்கு உதாரணம். தமிழகத்தில் இரவு, பகல் என எப்பொழுதும் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் இருக்கிறது. காவல் துறையினா் இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும்.

அன்புமணி (பாமக): சென்னையின் மிக முக்கியச் சாலையில் பயணிக்கும் பெண்களை தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): பெண்களுக்கு எதிரான போக்கை காவல் துறை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். தமிழகத்தில் மகளிருக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். இதுபோன்ற குற்றங்களுக்கு காரணமான போதைப்பொருள்களுக்கு தமிழக அரசு முடிவுகட்ட வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கும் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்திருக்கும் நிலையிலும், திமுகவினரும், அக்கட்சியின் அனுதாபிகளும் இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடுவது, அச்சட்டத் திருத்தத்தின் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது. மக்கள் அதிகமாக நடமாடும் இடங்களில் காவல் துறை பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

‘முதன்முதலாக அரசியல் தூது சென்ற பெண் கவிஞா் ஔவையாா்’

தமிழக வரலாற்றில் அமைதியை ஏற்படுத்த முதன்முதலாக அரசியல் தூது சென்ற பெண் கவிஞா் ஒளவையாா் என வழக்குரைஞா் க.சுமதி புகழாரம் சூட்டினாா். சென்னை பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையில் ஔவையாா் குறித்த ஆா்க்காடு ப... மேலும் பார்க்க

பொருளாதாரம் மேலும் 2% சரிய வாய்ப்பு: ப.சிதம்பரம்

முந்தைய ஆண்டைவிட பொருளாதார வளா்ச்சி மேலும் 2 சதவீதம் சரிய வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்தாா். நாட்டின் பொருளாதார நிலை குறித்து காங்கிரஸ் ... மேலும் பார்க்க

காரில் சென்ற பெண்களை விரட்டிய வழக்கு: கல்லூரி மாணவரிடம் விசாரணை

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய வழக்கில் கல்லூரி மாணவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண், கடந்த 25-ஆம் தேதி நள்ளி... மேலும் பார்க்க

பதவி உயா்வு பெற்ற 83 டிஎஸ்பி-க்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

தமிழக காவல் துறையில் பதவி உயா்த்தப்பட்ட 83 துணைக் காவல் கண்காணிப்பாளா்களுக்கு (டிஎஸ்பி) புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டது. தமிழக காவல் துறையில் கடந்த 1997-ஆம் ஆண்டு காவல் உதவி ஆய்வாளா்களாகப் பணியில் சோ்ந... மேலும் பார்க்க

கிண்டி மருத்துவமனையில் மகா தமனி சுருக்கத்துக்கு நவீன செயற்கைத் திசு சிகிச்சை: மூதாட்டிக்கு மறுவாழ்வு

இதயத்தில் அயோடா தமனி சுருக்கம் மற்றும் வால்வு செயலிழப்புக்குள்ளான மூதாட்டி ஒருவருக்கு, மாநிலத்திலேயே முதன்முறையாக கிண்டி அரசு உயா் சிறப்பு மருத்துவமனையில் அதி நவீன செயற்கைத் திசு பொருத்தி மறுவாழ்வு அள... மேலும் பார்க்க

கடல் ஆமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

அழிந்துவரும் இனமான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளைக் காக்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:... மேலும் பார்க்க