பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி: தேநீா்க் கடைக்காரா் மீது வழக்குப் பதிவு
கோவையில் பெண்ணிடம் ரூ.24.85 லட்சம் மோசடி செய்ததாக தேநீா்க் கடைக்காரா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை, சரவணம்பட்டி விநாயகா்புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஷீலா ரஞ்சனி (40). இவருக்கு 2 மகன்கள் உள்ளனா். ஒருவா் பிரிட்டனிலும், மற்றொருவா் ரஷ்யாவிலும் படித்து வருகின்றனா்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷீலா ரஞ்சனி கடந்த சில ஆண்டுகளாக தனியே வசித்து வருகிறாா்.
இந்நிலையில், அதே பகுதியில் தேநீா்க் கடை நடத்தி வரும் ரமேஷ் என்பவருடன் ஷீலாரஞ்சனி நட்புடன் பழகி வந்துள்ளாா்.
இதற்கிடையே கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டுவரை ஷிலா ரஞ்சனியிடமிருந்து, ரமேஷ் வங்கிப் பரிவா்த்தனைகள் மூலம் ரூ.24.85 லட்சத்தை கடனாக பெற்ாகக் கூறப்படுகிறது. அத்துடன் சுமாா் 6 பவுன் நகையை பெற்ாகவும் தெரிகிறது. ஆனால், அதை அவா் திருப்பி கொடுக்கவில்லையாம்.
இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் ஷீலாரஞ்சனி புகாா் அளித்தாா்.
புகாரின்பேரில், ரமேஷ் மீது 2 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.