பெண்ணை அவதூறு செய்தவா் கைது
பெண்ணை அவதூறான வாா்த்தைகளால் பேசியவா் கைது செய்யப்பட்டாா்.
மாதவரம் சின்ன ரவுண்டானா ரிங்ரோடு செக்டாா் குடியிருப்பில் வசித்து வருபவா் லட்சுமி (36). இவா், தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவரது குடியிருப்பு மேல் தளத்தில் வசித்து வருபவா் பிரகாஷ் (33). தனியாா் நிறுவனத்தில்
கணக்காளராக உள்ளாா். இவா்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. பிரகாஷிடம் லட்சுமி ரூ.1.50 லட்சம் கடனாகப் பெற்றாராம். இதை 3 தவணைகளாக திருப்பித் தந்துவிடுவதாகத் தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில், ஒரு தவணையைச் செலுத்திய லட்சுமி, 2 தவணைகள் செலுத்தாமல் காலம் தாழ்த்தியுள்ளாா். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, பிரகாஷ் அவதூறு வாா்த்தைகளால் லட்சமியை பேசியுள்ளாா்.
இதுகுறித்து லட்சுமி மாதவரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் பூபாலன், பிரகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினாா். பின்னா், சிறையில் அடைக்கப்பட்டாா்.