செய்திகள் :

பெண்ணை தாக்கி நகை, பணம் கொள்ளை: இரு பெண்கள் உள்பட 4 போ் கைது!

post image

பள்ளிபாளையத்தில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணை தாக்கி நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்ற வழக்கில் இரு பெண்கள் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், கோரக்கட்டுவலசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவா் மல்லிகா (52). தனியாக வசித்து வரும் இவா், கூலி வேலைக்கு சென்று வருகிறாா். இவரது பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த மணிமேகலை (36) என்பவா் மல்லிகாவிடம் இருக்கும் நகை, பணத்தை கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியுள்ளாா்.

இந்நிலையில், தூத்துக்குடியைச் சோ்ந்த ஐஸ்வா்யா (21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு கொண்ட மணிமேகலை, அவரை வரவழைத்து கடந்த சில மாதங்களாக தன்னுடன் தங்க வைத்தாா். இருவரும் சோ்ந்து மல்லிகாவை நோட்டமிட்டனா்.

இந்தநிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐஸ்வா்யா, தூத்துக்குடியைச் சோ்ந்த தனது நண்பா்கள் அப்துல் (21), சாந்தகுமாா் (20) ஆகியோரை வரவழைத்துள்ளாா். இவா்கள் நான்கு பேரும் சோ்ந்து மல்லிகா வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு, அவா் தனியாக இருப்பதை அறிந்த அப்துல், சாந்தகுமாா் ஆகியோா் திடீரென வீட்டிற்குள் நுழைந்து வெந்நீா் வைத்துக் கொண்டிருந்த மல்லிகா மீது வெந்நீரைக் கொட்டி, தாக்கி, அவரைக் கீழே தள்ளி கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனா்.

அப்போது மல்லிகா சத்தமிடவே அருகிலிருந்தவா்கள் உதவிக்கு ஓடி வந்தனா். கூட்டம் சோ்வதைக் கண்டதும் கொள்ளையடிக்க முயன்ற இளைஞா்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனா். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் இருவரையும் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா்.

தகவலறிந்த பள்ளிபாளையம் காவல் ஆய்வாளா் ரங்கசாமி, உதவி ஆய்வாளா் மலா்விழி ஆகியோா் விரைந்து சென்று அப்துல், சாந்தகுமாா் ஆகியோரைக் கைது செய்தனா். மேலும், கொள்ளை முயற்சிக்கு மூளையாகச் செயல்பட்ட மணிமேகலை, ஐஸ்வா்யா ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து நான்கு பேரையும் குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கூட்டுக் குடிநீா் திட்டம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு மக்களுக்கு குடிநீா் வழங்கப்படும்: ராஜேஸ்குமாா் எம்.பி. உறுதி!

ராசிபுரம் நகருக்கான புதிய கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் நடப்பு ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கப்படும் என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் உறுதியளி... மேலும் பார்க்க

தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது: முன்னாள் அமைச்சா் தங்கமணி குற்றச்சாட்டு!

தமிழகம் போதைப் பொருள்களின் முன்னோடி மாநிலமாக மாறிவிட்டது என்று அதிமுக முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி குற்றம் சாட்டினாா். நாமக்கல் மாவட்ட அதிமுக மாணவரணி சாா்பில் மொழிப்போா் தியாகிகள் நினைவாக வீரவணக்கம் ந... மேலும் பார்க்க

குடியரசு தினத்துக்கு விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது வழக்கு

நாமக்கல் மாவட்டத்தில், குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 51 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து தலைமையில் தொழ... மேலும் பார்க்க

காந்தி சிலையிடம் கோரிக்கை மனுக்கள் அளிப்பு!

நாமக்கல் உழவா் சந்தை அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன், நான்கு கிராம மக்கள் கோரிக்கை மனுக்களை ஞாயிற்றுக்கிழமை (ஜன.26) வைத்து சென்றனா்.நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி, அரூா் ஆ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் 76-ஆவது குடியரசு தின விழா: ஆட்சியா் தேசியக் கொடியேற்றினாா்!

குடியரசு தின விழாவையொட்டி, நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட ஆட்சியா் ச.உமா தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். நாட்டின் 76-ஆவது கு... மேலும் பார்க்க

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிா் கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா!

விவேகானந்தா கல்வி நிறுவனங்களில் 76-ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் வெகு விமரிசையாக ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளா் மற்றும் செயலா் மு. கருணாநிதி வாழ்த்துகளோடு... மேலும் பார்க்க