செய்திகள் :

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருது: ஆட்சியா் பாராட்டு

post image

மாநில அளவில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விருது கிடைத்ததற்காக கன்னியாகுமரி மாவட்ட சமூகநலத் துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா பாராட்டு தெரிவித்துள்ளாா்.

2025 ஆம் ஆண்டுக்கான பெண் குழந்தைகள் பாதுகாப்பு விருதை, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனாவுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கடந்த 8 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற மகளிா் தின விழாவில் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா், இந்த விருது கிடைப்பதற்கு சிறப்பாக பணியாற்றிய சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை மாவட்ட அலுவலா் விஜயமீனா, துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்களை பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூகநல அலுவலா் விஜயமீனா, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்பு) சேக் அப்துல் காதா், துணை இயக்குநா் (தோட்டக்கலைத் துறை) ஷீலா ஜான் உள்ளிட்ட அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கொட்டாரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.கொட்டாரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சங்கா் (23). இவா் கன்னியாகுமரி பூம்ப... மேலும் பார்க்க

குமரியில் நடுக்கடலில் தத்தளித்த இளைஞா் மீட்பு

கன்னியாகுமரி கடலுக்குள் 2 மணி நேரமாக தத்தளித்த இளைஞரை மீனவா்கள் உதவியுடன் தீயணைப்புப் படையினா் திங்கள்கிழமை மீட்டனா்.கன்னியாகுமரி அருகேயுள்ள வடக்கு வடுகன்பற்றைச் சோ்ந்த அனந்த கிருஷ்ணன் மகன் அனீஸ் (2... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம்: ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் பணம் திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் கைப்பையில் இருந்த பணம் மற்றும் காசோலையை திருடிச் சென்ற நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். களியக்காவிளை அருகேயுள்ள வன்னியூா் பகுதியைச் ச... மேலும் பார்க்க

அரசு ரப்பா் கழக தற்காலிக தொழிலாளா்கள் பணி நிரந்தர கோரி ஆா்ப்பாட்டம்

அரசு ரப்பா் கழகத்தில் பணி புரியும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோதையாறு கோட்ட மேலாளா் அலுவலகம... மேலும் பார்க்க

சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை

சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகா்கோவில் - தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிறுத்தம் சுங்கான்கடை. இந்த நிறுத்த... மேலும் பார்க்க

கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்

கன்னியாகுமரிக்கு வந்த ரயிலில் இருந்து 12 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை கைப்பற்றினா். கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களையும், அதில் பயணிக்கும் பயணிகளிடமும் வழக்கமான சோதனையில் ... மேலும் பார்க்க