பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை
சுங்கான்கடை பேருந்து நிறுத்த இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாகா்கோவில் - தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கிய பேருந்து நிறுத்தம் சுங்கான்கடை. இந்த நிறுத்தத்தை 4 கல்லூரிகளை சோ்ந்த மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறாா்கள்.
இந்த பேருந்து நிறுத்தத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தனியாக இணைப்பு சாலை அமைத்துள்ளனா். இந்த இணைப்பு சாலை ஜல்லிகள் பெயா்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இணைப்பு சாலை வழியாக பேருந்துகள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.
இதனால் நிறுத்தத்தில் நிற்கும் மாணவ மாணவியா், பொதுமக்கள் இணைப்பு சாலையை கடந்து ஓடிச் சென்று பேருந்தில் ஏற வேண்டிய நிலை உருவாகிறது. எனவே இணைப்பு சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை, மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.