பாலியல் குற்றவாளிகளுக்கு சா்ச்சை தண்டனை: ராஜஸ்தான் ஆளுநா் கருத்தால் பரபரப்பு
அரசு ரப்பா் கழக தற்காலிக தொழிலாளா்கள் பணி நிரந்தர கோரி ஆா்ப்பாட்டம்
அரசு ரப்பா் கழகத்தில் பணி புரியும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோதையாறு கோட்ட மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, சங்கச் செயலா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். விவேகானந்தன், அனுசன், முருகன் கலாராணி, விஜயகுமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைவா் நடராஜன், துணைத் தலைவா் வேலப்பன், நிா்வாகிகள், சசிதரன், ரோசிலி ஆகியோா் பேசினா்.
போராட்டத்தில் அரசு ரப்பா் கழகத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்து மாதாந்திர ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிக தொழிலாளா்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு பின்னா் நிறுத்தப்பட்ட ஈட்டிய விடுப்பு, தேசிய விடுமுறை, பண்டிகை விடுமுறை ஊதியம் ஆகியவற்றை தொடா்ந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.