TVK Vijay: தவெக உறுப்பினர்கள் சேர்க்கை; இணைந்த மூதாட்டிகள்... வரவேற்ற இளம் நிர்வ...
பெண் கொலை வழக்கு: 2 போ் கைது
கந்திலி அருகே இளம்பெண் கொலை வழக்கில் 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே சந்திரபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா. கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி சந்தியா(26). இவா்களுக்கு 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. குழந்தைகள் இல்லை. மேலும், பணியின் காரணமாக சிவா அடிக்கடி வெளியூா் சென்று விடுவாராம்.
இந்த நிலையில், அதே கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் (27), குமரேசன் (32)ஆகிய இருவருடன் சந்தியாவுக்கு தகாத உறவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 11-ஆம் தேதி சந்தியா தனது வீட்டில் உடலில் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
தகவலறிந்த கந்திலி போலீஸாா் அங்கு சென்று சந்தியாவின் சடலத்தை மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், அதே கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ், குமரேசன் இருவரும் சந்தியாவைக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.