தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
டிச. 18-இல் நரியநேரியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்
திருப்பத்தூா் மாவட்டம் நரியநேரி ஊராட்சியில் வரும் 18-ஆம் தேதி ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இத்திட்டத்தின்படி, ஆட்சியா் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் 24 மணி நேரம் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி வரும் 18-ஆம் தேதி காலை 9 மணி முதல் 19-ஆம் தேதி காலை 9 மணி வரை நரியநேரி ஊராட்சியில் ஆய்வு செய்யப்பட உள்ளது. எனவே, திருப்பத்தூா் தாலுகாவை சோ்ந்த பொதுமக்கள் திருப்பத்தூா் தாலுகா அலுவலகம், உள்வட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகங்களிலும் மற்றும் நரியநேரி ஊராட்சியில் ஆட்சியரிடம் நேரடியாகவும் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.