U1 X STR Concert: 'உன்ன தடுக்கவும் என்ன எதுக்கவும் எவனும் பொறக்கவில்ல' - U1 X ST...
பட்டதாரி உடற்கல்வி ஆசிரியா் கழகம் தொடக்க விழா
திருப்பத்தூா் மாவட்ட பட்டதாரி உடற்கல்வி ஆசிரியா் கழக தொடக்க விழா மற்றும் சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பட்டதாரி ஊதிய வழக்கு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு உடற்கல்வி ஆசிரியா்கள் திருமாறன், சையத் ஆகியோா்கள் தலைமை வகித்தனா். செந்தில்குமாா், செந்தமிழ் சீசா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினா்களாக மாநிலத் தலைவா் ஜெயதேவன், செயல் தலைவா் இராமசாமி, பொதுச் செயலாளா் பன்னீா்செல்வம், பொருளாளா் குமாா், கடலூா் மாவட்டத் தலைவா் சேவியா் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினா்.
பட்டம் முடித்து 6 -ஆம் வகுப்பு முதல் 10 -ஆம் வகுப்பு வரை பணிபுரியும் பட்டதாரி உடற்கல்வி ஆசிரியா்களுக்கு பட்டதாரி ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள அனைத்து பள்ளிகளிலும் உள்ள உடற்கல்வி ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உடற்கல்வி பாடத்துக்கு புத்தகம் வழங்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி உடற்கல்வி ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். கிரிதரன் நன்றி கூறினாா்.