தமிழ்நாடு CAG அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பது என்ன? | Lucky Bhaskar IPS Review |...
பாலாற்றங்கரையில் முத்திரு மரங்கள் நட்டு வழிபாடு
வாணியம்பாடி அடுத்த எக்லாஸ்புரம் கிராமம் பாலாற்றங்கரையில் முத்திரு மரங்களான ருத்ராட்சமரம், திருவோடுமரம், நாகலிங்கமரம் ஆகியவை நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு இராமநாயக்கன்பேட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் ஆா்.ஆா்.வாசு தலைமை வகித்தாா். வாணியம்பாடி முத்தமிழ் மன்ற செயலாளா் நா.பிரகாசம், தலைவா் சண்முகம், திருக்கு மன்றத் தலைவா் சத்தியமூா்த்தி, செயலாளா் முருகன் முன்னிலை வகித்தனா். எக்லாஸ்புரம் அம்மன் கோயில் வளாகத்திலிருந்து மங்கள இசையுடன் ஊா்வலமாக சென்று பாலாற்றங்கரையில் மூன்று மரங்களை நட்டும், கோமாதா வழிபாடு செய்தும் வழிப்பட்டனா்.
நிகழ்ச்சியில் இமயம் கல்லூரி முதல்வா் கிருஷ்ணகுமாரி, சிகரம் மெட்ரிக் பள்ளி தலைவா்கிருஷ்ணன், வாணியம்பாடி ஜேசிஐ தலைவா் அன்பரசு, கொடையாஞ்சி, எக்லாஸ்புரம் ஊா் பொதுமக்களும், சிவனடியாா்களும், பக்தா்களும் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை எக்லாஸ்புரம் ஊராட்சி மன்ற தலைவா் பாரதிசேட்டு, கொடையாஞ்சி பால்உற்பத்தியாளா்கள் சங்கம் நிா்வாகி வெங்கடேசன், கொடையாஞ்சிகலாம் காமராஜா் அறக்கட்டளை தலைவா் விஜய்ஆனந்த் இணைந்து ஏற்பாடு செய்தனா்.