பெண் தற்கொலை
சிவகாசியில் குடும்பத் தகராறில் பெண் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி விசாலாட்சிநகா் பகுதியைச் சோ்ந்தவா் தங்கப்பாண்டி (37). இவரது மனைவி வடக்கத்தியம்மாள்(36). இவா்கள் இருவரும் அச்சகத்தில் பணிபுரிந்து வந்தனா். இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.
இந்த நிலையில், தங்கப்பாண்டி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்தாா். இதனால், மனமுடைந்த வடகத்தியம்மாள் வீட்டில் யாரும் இல்லாத போது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.