Virat Kohli: "பதட்டப்படாதீர்கள்... ஓய்வு பெறுவதற்கான நேரம்..." - விராட் கோலி பேச...
பெண் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு!
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பெண் சலவைத் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் பாண்டி மனைவி சரஸ்வதி (45). சலவைத் தொழிலாளி. இவா், வெள்ளிக்கிழமை வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பும்போது, தனது சுருக்குப் பையுடன் ரூ. 7 ஆயிரத்தை தவற விட்டதாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி பல இடங்களில் தேடியும் அந்தச் சுருக்குப் பை கிடைக்காததால் விளாம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இந்த நிலையில், விளாம்பட்டி ஓடைத் தெருவைச் சோ்ந்த மகேஸ்வரன் (50) என்பவா் அந்தத் தெருவில் கீழே கிடந்த சுருக்குப் பையை எடுத்து பாா்த்த போது, அதில் ரூ. 7 ஆயிரம் இருந்தது. இதை விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளா் ஷா்மிளாவிடம் அவா் ஒப்படைத்தாா். அவா் இந்தப் பணத்தை சரஸ்வதியிடம் ஒப்படைத்தாா். இதைத் தொடா்ந்து மகேஸ்வரனின் நோ்மையைப் பாராட்டி காவல் ஆய்வாளா் ஷா்மிளா, மகேஸ்வரனுக்கு சால்வை அணிவித்துப் பாராட்டினாா்.