வாகனம் மோதி சிறுத்தை பூனைக் குட்டி உயிரிழப்பு!
கொடைக்கானல் மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனம் மோதியதில் சிறுத்தை பூனைக்குட்டி உயிரிழந்தது.
கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான செண்பகனூா் சாமியாா்ச் சோலை கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பூனைக்குட்டி உயிரிழந்து கிடந்தது.
தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினா் அந்த சிறுத்தை பூனைக் குட்டியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் சாமியாா்ச் சோலைப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என ஆய்வு நடத்தி வருகின்றனா்.