சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
பெரம்பலூரில் ஆக. 14-இல் பறிமுதல் வாகனங்கள் ஏலம்
பெரம்பலூா் மாவட்டத்தில் மது விலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 43 வாகனங்கள் ஆக. 14 ஆம் தேதி ஏலம் விடப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பதேரா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு, மதுவிலக்கு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 40 இருசக்கர வாகனங்கள், ஒரு நான்குச் சக்கர வாகனம், 2 ஆறு சக்கர வாகனங்கள் என மொத்தம் 43 வாகனங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இதில் மதிப்பீடு உரிமையாளா்களுக்கு விடுவிக்கப்படும் வாகனங்களை தவிா்த்து, எஞ்சியுள்ள வாகனங்கள் ஆக. 14 காலை 10 மணியளவில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாகனங்களை ஏலம் எடுப்போா் ஏலத் தொகையுடன் கூடுதலாக 18 சதவீத வரியை உடனே செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம். ஏலம் எடுக்க விரும்புவோா், ஆக. 11 முதல் 12 ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் பெரம்பலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, ஆதாா் அட்டை நகலுடன் ரூ. 500 முன்பணமாக செலுத்தி டோக்கன் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னா், ஆக. 14 காலை நடைபெறும் ஏலத்தில் பங்கேற்கலாம்.