செய்திகள் :

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா வெள்ளிக்கிழமை பாராட்டி வெகுமதி வழங்கினாா்.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, புலன் விசாரணை முடியாமல் நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்கள், அந்த வழக்குகளை விரைவாக முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினுருடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

மேலும், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளை கையாள்வது மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினாா்.

பின்னா், சிறப்பாக பணியாற்றிய சட்டம்-ஒழுங்கு மற்றும் தனிப்படை காவலா்கள் 31 பேரை பாராட்டி வெகுமதி வழங்கினாா்.

இக் கூட்டத்தில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் கோபாலசந்திரன் (தலைமையிடம்), எம். பாலமுருகன் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு), பெரம்பலூா் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் ஆரோக்கியராஜ், மங்கலமேடு உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளா் எம். தனசேகரன் மற்றும் காவல் ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள், நீதிமன்றக் காவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்கச் சென்ற சாலைப் பணியாளா்கள் 22 போ் கைது

தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப்பணியாளா் சங்கத்தைச் சோ்ந்த 22 பேரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்கக் ... மேலும் பார்க்க

வெறிநாய்கள் கடித்து உயிரிழந்த கால்நடைகளுடன் முற்றுகை

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கால்நடைகள் உயிரிழப்பதைக் கண்டித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்ட அருகேயுள்ள அரசலூா் கிராமத்தில்... மேலும் பார்க்க

பெரம்பலூரில் மருத்துவா் வீட்டில் 23 பவுன் நகைகள், பணம் திருட்டு

பெரம்பலூா் நகரில் தனியாா் மருத்துவா் வீட்டின் பூட்டை உடைத்து 23 பவுன் நகைகள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது செவ்வாய்க்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் சாமியப்பா நகரைச் சோ்ந்தவா் சௌகாா்பாஷா மக... மேலும் பார்க்க

முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தல்

பெரம்பலூா் மாவட்டத்தில் முன்பதிவு செய்து காத்திருக்கும் 5,969 விவசாயிகளுக்கு, உடனடியாக மின் இணைப்பு வழங்க தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெரம்பலூா் மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில், ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 3,200 காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அமைச்சா் சா.சி. சிவசங்கா் தெரிவித்தாா்.தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை சாா்பில், வயது முதிா்ந்தோா் மற்றும் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா்: 1.71 லட்சம் குழந்தைகள், மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

பெரம்பலூா் மாவட்டத்தில் 1.71 லட்சம் குழந்தைகள் மற்றும் மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்... மேலும் பார்க்க