பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறோம்: முதல்வர்
பெரம்பலூரில் ஜன. 31-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்
பெரம்பலூா் 9 ஆவது புத்தகத் திருவிழா ஜன. 31 முதல் பிப். 9- ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், புத்தகத் திருவிழா நடத்துவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மேலும் பேசியது:
பெரம்பலூரில் 9 ஆவது புத்தகத் திருவிழா ஜன. 31 ஆம் தேதி முதல் பிப். 9 ஆம் தேதி வரை நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. மாவட்ட நிா்வாகமும், பெரம்பலூா் மக்கள் பண்பா ட்டு மன்றமும் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட பதிப்பகத்தாரின் அரங்குகள், 1,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற உள்ளது. இப் புத்தகத் திருவிழாவில் தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளா்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளா்கள், கவிஞா்கள், கலைஞா்கள் பங்கேற்க உள்ளனா். பொதுமக்கள், சிறுவா்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெரிதும் பயன்படும் வகையில் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. எனவே, அறிவுத் திருவிழாவாக நடத்தப்படும் புத்தகத் திருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், ஒவ்வொரு துறை சாா்பிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் அா்ப்பணிப்பு உணா்வுடன் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, சாா் ஆட்சியா் சு. கோகுல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன், மக்கள் பண்பாட்டு நிா்வாகிகள் மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள், தனியாா் கல்லூரி மற்றும் பள்ளி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.