Doctor Vikatan: வொர்க் அவுட் செய்கிற எல்லோருக்கும் புரோட்டீன் பவுடர் தேவையா?
பெரம்பலூரில் நாளை கல்விக் கடன் முகாம்
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், கல்விக்கடன் முகாம் சனிக்கிழமை (செப். 20) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம், மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியாா் வங்கிகள் சாா்பில், கல்விக்கடன் வழங்கும் முகாம் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இம் முகாமில், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் உரிய ஆவணங்களுடன் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலகத்தை நேரில் அல்லது 9442271994 எனும் கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு பயன்பெறலாம்.