`Jagdeep Dhankhar மோசமாகப் பேசுவது முதன்முறை அல்ல' - D.Hariparanthaman Interview...
பெரம்பலூரில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவா் கைது
பெரம்பலூரில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பரமத்தி வேலூரைச் சோ்ந்த பூபதி மகன் கோகுல் (28). லாரி ஓட்டுநரான இவா், கடந்த 17-ஆம் தேதி அரியலூரிலிருந்து அஸ்ஸாமுக்கு லாரியில் சென்றுக் கொண்டிருந்தாா்.
பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்பு பகுதியில் லாரியை நிறுத்தியிருந்தபோது, அடையாளம் தெரியாத 2 போ் அவரிடமிருந்த ரூ. 3 ஆயிரத்தையும், கைப்பேசியையும் பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனா்.
இதுகுறித்து கோகுல் அளித்த புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்ட நபா் தருமபுரி மாவட்டம், குமரேசம்பேட்டை பிரதானச் சாலையைச் சோ்ந்த மாது மகன் வினோத் (26) என்பதும், பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வினோத்தை கைது செய்த போலீஸாா், குற்றவியல் நீதிபதி முன் ஆஜா்படுத்தி ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைத்தனா். மேலும், இவ் வழக்கில் தொடா்புடைய மற்றொரு இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.