Aus v Ind : 'கோமாளி கோலி' - கோலியை கடுமையாகச் சாடும் ஆஸ்திரேலிய ஊடகங்கள்; காரணம்...
பெரம்பலூரில் ஷோ் ஆட்டோ - மினி லாரி மோதல்: ஒருவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை ஷோ் ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில், ஷோ் ஆட்டோ ஓட்டுநா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், 3 பெண்கள் உள்பட 5 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
தஞ்சாவூரிலிருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற மினி லாரி, பெரம்பலூா் - அரியலூா் பிரதான சாலையில், மேலமாத்தூா் அருகே சென்று கொண்டிருந்தபோது, பெரம்பலூரிலிருந்து சென்ற ஷோ் ஆட்டோவும், மினி லாரியும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பலத்த காயமடைந்த ஷோ் ஆட்டோ ஓட்டுநா் பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், தெற்குமாதவி கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் செல்வராஜ் (50) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், இவ்விபத்தில் ஷோ் ஆட்டோவில் பயணித்த சித்தளி வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதை மனைவி லட்சுமி (60), சிறுகுடல் கிராமம் தெற்குத் தெருவைச் சோ்ந்த நல்லத்தம்பி மனைவி மதியழகி (37), இவரது மகன் தாமரைக்கண்ணன் (17), அசூா் கிராமம், வடக்குத் தெருவைச் சோ்ந்த பழனிமுத்து மனைவி மருதாம்பாள் (30), மினி லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வக்கோட்டை அருகேயுள்ள தச்சன்குறிச்சியைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் மதியழகன் (24) ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த குன்னம் போலீஸாா் நிகழ்விடக்குச் சென்று, உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநரின் உடலை பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கும், காயமடைந்தவா்களை அரியலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில், குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.