செய்திகள் :

பெரம்பலூர், கரூரில் காலணி தொழிற்சாலை அமைக்கும் எவர்வன் குழுமம்!

post image

சென்னை: பீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் துணை நிறுவனமான எவர்வன் கோத்தாரி காலணி லிமிடெட் தமிழகத்தில் ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி உற்பத்தி திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 50,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளது.

தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் என். முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில், பீனிக்ஸ் கோத்தாரி குழுமத்தின் செயல் தலைவர் ரபீக் அகமது தலைமையிலான எவர்வன் கோத்தாரி ஆகியோர் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தாரீஸ் அகமதுவுடன் ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர்.

இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், மாநிலம் முழுவதும் பரவலான வளர்ச்சியை உறுதி செய்யவும் தொழில், முதலீட்டு மேம்பாடு மற்றும் வணிகத் துறை பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கரூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் காலணி தயாரிக்கும் திட்டத்தை நிறுவும் திட்டத்துடன், பின்தங்கிய மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இந்த முயற்சி தனிநபர் வருமான அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இப்பகுதியின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.

இதையும் படிக்க: ஹோம் ஹெல்த்கேர் சேவையை விரிவுபடுத்தும் ஸ்டார் ஹெல்த்!

ஹோம் ஹெல்த்கேர் சேவையை விரிவுபடுத்தும் ஸ்டார் ஹெல்த்!

சென்னை: ஸ்டார் ஹெல்த் அண்ட் அலைடு இன்சூரன்ஸ் தனது ஹோம் ஹெல்த் கேர் முயற்சிகளை நாடு முழுவதும் 100 இடங்களில் விரிவுபடுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.ஜூலை 2023ல் தொடங்கப்பட்ட இந்த முயற்சியானது, ஸ்டார்... மேலும் பார்க்க

டாடா மோட்டார்ஸ்: பங்குச் சந்தை சரிவால் ரூ. 2 லட்சம் கோடி இழப்பு!

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து சரிந்து வருவதால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பார்க்க

ரூ.3,200 கோடியில் சிமெண்ட் ஆலையை அமைக்கும் ஸ்டார் சிமெண்ட்!

குவாஹாட்டி: அசாமில் ஸ்டார் சிமெண்ட் லிமிடெட் ஆனது ரூ.3,200 கோடியில் சிமென்ட் கிளிங்கர் மற்றும் கிரைண்டிங் ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.அசாம் வர்த்தக உச்சி மாநாட்டின் இறுதி நாளான... மேலும் பார்க்க

ஹரியாணாவில் வணிக உற்பத்தியைத் தொடங்கிய மாருதி சுசூகி!

புதுதில்லி: உள்நாட்டில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், மாருதி சுசூகி இந்தியா, ஹரியாணாவில் உள்ள கார்கோடா ஆலையில் தனது வணிக உற்பத்தியைத் தொடங்கியுள்ளது.இந்த வசதிக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி... மேலும் பார்க்க

அசாம், திரிபுராவில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் வேதாந்தா குழுமம்!

குவாஹாட்டி: அசாம் மற்றும் திரிபுராவின் எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளில் ரூ.50,000 கோடியை முதலீடு செய்வதாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இன்று அறிவித்தார்.அட்வா... மேலும் பார்க்க

பிளிங்கிட் வளர்ச்சிக்காக ரூ.1,500 கோடி அளிக்கும் சொமாட்டோ!

பிளிங்கிட் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அதன் தாய் நிறுவனமான சொமாட்டோ ரூ. 1,500 கோடி வழங்க திட்டமிட்டுள்ளது. நிறுவனப் பதிவுக்கான ஒழுங்குமுறை தாக்கல் மற்றும் நிறுவனத்தின் விரிவாக்க உத்திகளுக்காக பிளிங்கிட... மேலும் பார்க்க