செய்திகள் :

பெரியார் விவகாரம் : `ஆதாரம் இருக்கு... ஆனா இல்ல’ - சீமான் சர்ச்சை பேச்சுக்கு நா.த.க சொல்வதென்ன?

post image

பெரியார் குறித்து, `விமர்சனம்’ என்கிற பெயரில் அவதூறுகளை அள்ளி வீசியிருக்கிறார் ‘நாம் தமிழர் கட்சி’யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என கொதிக்கிறது திராவிட அமைப்புகள். அதேசமயம் ஆளுநருக்கு ஆதரவான கருத்தை உதிர்திருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது. சீமானின் பேச்சுக்கு ஆதாரம் எங்கே? என்ற கேள்வி வலுவாகியிருக்கும் சூழலில் `ஆதாரம் இருக்கு..ஆனா இல்ல’ என மழுப்பி வருகிறார்கள் நாம் தமிழர் கட்சியினர்.

பெரியார்

கடந்த ஜனவரி 8-ம் தேதி கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த சீமான் `பெரியாரை கொள்கை வழிகாட்டி என்றால் எந்த இடத்தில் கொள்கை வழிகாட்டி எனச் சொல்லுங்கள். பெண்ணிய உரிமையிலா? உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்றா தாயோ மகளோ அக்காவோ தங்கச்சியோ அவரோடு உறவு வைத்துக் கொண்டு சந்தோஷமாக இரு எனச் சொன்னது பெண்ணிய உரிமையா?” எனக் கேட்டார். ஆனால் பெரியார் அவ்வாறு பேசவில்லை என அடித்துச் சொல்கிறார்கள் பெரியாரியவாதிகள்.

மறுபக்கம் ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என் ரவி வெளியேறியது குறித்து எழுந்த கேள்விக்கு தி.மு.க மீது பாய்ந்த சீமான்``நீங்கள் எழுதிக் கொடுத்ததை ஆளுநர் படிக்க வேண்டுமா, இவ்வளவு பொய் பேச வேண்டுமா என்று அவர் படிக்காமல் சென்று விட்டார்” என ஆளுநருக்கான ஆதரவை நல்கினார். பெரியாரைக் கொச்சைப்படுத்தி, திராவிட அரசியலை நீர்த்துப்போகச் செய்வதற்கான சதித்திட்டங்களைத் தொடங்கிவிட்டது ஆரியம். அதன் ஒரு பகுதியாக, சீமானை இயக்குகிறது ஆர்.எஸ்.எஸ் என்கிற விமர்சனத்தை தி.மு.க கூட்டணியினர் முன்வைக்கின்றனர்.

பெரியாருக்கு மரியாதை செலுத்தும் சீமான்

நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள் ``ஆளுநர் உரைமீது விமர்சனத்தை முன்வைப்பது எதிர்க்கட்சிகளின் உரிமை. ஆனால் ஆளுநர் உரையில் இருப்பதை அப்படியே வாசிப்பதுதான் சட்டமன்ற மரபு. அந்த மரபைமீறி ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்றதை நியாயப்படுத்துவது என்பது பா.ஜ.க-வின் நிலைப்பாடாக இருக்கிறது. அதையே சீமானும் எடுக்கிறாரா என்ற சந்தேகம் கிளம்புகிறது. அதேபோல் பெரியாரை விமர்சிப்பதும் பாராட்டுவதும் அவரவர் உரிமை ஆனால் பெரியார் சொன்னதாக சீமான் சொல்வதற்கு ஆதாரம் எங்கே? என்பதுதான் அவர் முன்பிருக்கும் கேள்வி. ஆனால் அவரிடம் ஆதாரம் இல்லாததால்தான் நாட்டுடைமையாக்குங்கள் என பிதற்றுகிறார்கள்” என்கிறார்கள்.

இதுகுறித்து விளக்கம்கேட்க நா.த.க-வின் மாணவர் பாசறை மாநிலச் செயலாளர் அபுபக்கரிடம் பேசினோம், ``ஆர்.என் ரவி ஆளுநருக்கான உரையை வாசிக்காமல் வெளியேறியது தவறு என்பதுதான் கட்சியின் நிலைப்பாடு. இவ்விவகாரத்தில் ஆளுநரை கண்டித்து அண்ணன் சீமான் பேசியிருக்கிறார்.

அபுபக்கர், நாம் தமிழர்

அதேசமயம் ஆளுநர் உரையில் தமிழ்நாட்டின் யதார்த்த சூழலுக்கு எதிரானவற்றை எழுதிக்கொடுத்ததும் தவறு என்கிறார். ஆனால் இதைவைத்து ஆளுநருக்கு ஆதரவான கருத்து எனக் கட்டமைக்கிறார்கள்.

மேலும் பெரியார் விவகாரத்தில் அண்ணன் சொன்ன குறிப்பிட்ட கருத்துக்கு மீளாய்வு செய்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். குழந்தை பெற்றுக் கொள்ளாமல் உறவு வைத்துக் கொள்வது குறித்து பெரியார் சொன்னதாக வீரமணி பேசியிருக்கிறார். பிறர் மனைவி நோக்குவது தவறல்ல என சேலம் மாநாட்டில் பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். இந்த புறநிலை சாட்சிகளை வைத்து அதற்கான தரவுகளை தேடிக் கொண்டிருக்கிறோம். பெரியார் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டால் ஆதாரம் தருகிறோம்” என்றார் மழுப்பலாக.

`ஆதாரம் இருக்கு.. ஆனா இல்ல’ என்ற கதையாக தெரிகிறதே!

`ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் புறக்கணக்கிறோம்...!' - அண்ணாமலை அறிவிப்பு

அதிமுக, தேமுதிக-வைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.- =ஏ 121காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்ப... மேலும் பார்க்க

ஈரோடு: `நாமம்' போட்டு காங்கிரஸார் எதிர்ப்பு; வைரலாகும் திமுக நிர்வாகியின் பதிவு - வெடிக்கும் சர்ச்சை

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 5-ஆம் தேதி கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல்... மேலும் பார்க்க

'ஸ்டாலினின் இந்த ஆணவம் நல்லதல்ல...' - தேசிய கீத விவகாரத்தில் ஆளுநர் மாளிகை காட்டம்

முதல்வர் ஸ்டாலினின் ஆணவம் நல்லதல்ல என ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்திருக்கிறது.2025 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரின்போது பேரவைக்குள் சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இச... மேலும் பார்க்க

Trump: டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஜெய்சங்கர்! - இந்தியா - அமெரிக்கா உறவு வலுக்குமா?!

கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஸை எதிர்த்து குடியரசு கட்சி சார்பாக டிரம்ப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிரம்ப் வரும் 20-ம் தேதி 47-வது அமெரிக்க அதிபராக பொற... மேலும் பார்க்க

'பெரியார் என்ன சமூகநீதி செய்தார்... பெண்ணுரிமை பேச பிரபாகரனுக்கு மட்டுமே தகுதி இருக்கிறது'- சீமான்

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்துகள் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.சீமானின் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.... மேலும் பார்க்க

Trump : குற்றம் நிரூபிக்கப்பட்ட டிரம்ப்... எந்தெந்த நாடுகளுக்குச் செல்ல முடியாது?!

சில நாடுகளின் சட்டப்படி, குற்றவியல் தண்டனைப் பெற்றவர்கள் அந்த நாடுகளுக்குள் வர முடியாது. அமெரிக்க அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் 'ஹஸ் மனி (Hush Money)' வழக்கில் குற்றவாளி என்று உறுதிசெய்யப்பட்டுள்ளா... மேலும் பார்க்க