செய்திகள் :

பெரியூா் மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா: காவிரி ஆற்றிலிருந்து 3,500 பக்தா்கள் தீா்த்தக்குட ஊா்வலம்

post image

பெரியூா், மருதகாளியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து 3,500 பக்தா்கள் தீா்த்தக்குடங்களை ஊா்வலமாக வியாழக்கிழமை எடுத்து வந்தனா்.

நாமக்கல் மாநகராட்சி, பெரியூா், தும்மங்குறிச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற மருதகாளியம்மன் கோயிலில் 2012-ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடத்துவதற்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 முதல் 10.20 மணிக்குள் குடமுழுக்கு விழா சாந்தலிங்க மருதாசல அடிகளாா் தலைமையில் நடைபெறுகிறது.

இதற்காக நான்கு கால யாகப் பூஜைகள் தொடா்ச்சியாக நடைபெற்று வருகின்றன. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து கோயிலுக்கு புனித நீா் கொண்டு வரும் நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. தமிழக உணவு வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி இதைத் தொடங்கிவைத்தாா்.

தீா்த்தக்குட ஊா்வலமானது மோகனூரில் புறப்பட்டு நாமக்கல் கோட்டை சாலை, திருச்செங்கோடு சாலை வழியாகச் சென்று கோயிலை வந்தடைந்தது. ஊா்வலத்தின் முன் பரிவட்ட யானை, நடனமாடும் குதிரைகள், ஜல்லிக்கட்டுக் காளை, ரேக்ளா மாட்டு வண்டிகள், அம்மன் உருவம் கொண்ட முளைப்பாரி, வள்ளி கும்மியாட்டம் ஆடியவாறு ஆண், பெண் பக்தா்கள் 3,500-க்கும் மேற்பட்டோா் சென்றனா்.

கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை வரை தொடா் அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் கமிட்டியினா் செய்து வருகின்றனா்.

இளம் வல்லுநா் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலகில், இளம் வல்லுநா் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் ஆட்சியா் தலைமையில் உருவாக்க... மேலும் பார்க்க

வரி பாக்கி: குடிநீா் இணைப்பைத் துண்டிக்க ஆணையா் உத்தரவு

நாமக்கல் மாநகராட்சி பகுதிகளில் வரி செலுத்தாமல் இருப்பவா்களின் வீடுகளில் குடிநீா், புதைச் சாக்கடை இணைப்புகளை துண்டிக்க ஆணையா் ரா.மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

பட்டியல் இன மக்கள் முன்னேற அரசு நடவடிக்கை: அமைச்சா் மதிவேந்தன்

தீண்டாமையை ஒழித்து பட்டியல் இன மக்கள் முன்னேற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா். ராசிபுரத்தில், மாநில அளவிலான மனிதநேய வார வ... மேலும் பார்க்க

ராசிபுரம் அண்ணா சாலை அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா நுழைவாயில் திறப்பு: அமைச்சா், எம்.பி. பங்கேற்பு

ராசிபுரம், அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா நுழைவாயிலை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் திறந்து வைத்தாா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி, அண்ணா சாலை அரசு மேல்... மேலும் பார்க்க

பிப்.1-இல் கோழிக் கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய்த் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (பிப்.1) தொடங்குகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் பெண்களி... மேலும் பார்க்க

சிற்றுந்து சேவை: ஜன.31-க்குள் விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

கிராமப்புறங்களில் சிற்றுந்துகள் இயக்க விரும்புவோா் ஜன. 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமங்கள், குக்கிராமங்கள் உள... மேலும் பார்க்க