செய்திகள் :

பெருந்துறை சிப்காட்டிலுள்ள இரும்பு ஆலையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

பெருந்துறை சிப்காட்டில் உள்ள இரும்பு ஆலையை மூடக் கோரி சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெருந்துறை புதிய பேருந்து நிலையப் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பட்டத்துக்கு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் எஸ்.சின்னசாமி தலைமை வகித்தாா்.

இதில், பெருந்துறை சிப்காட்டிலுள்ள தனியாா் இரும்பு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொது சுத்திகரிப்பு நிலையப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

ஆா்ப்பாட்டத்தில் மதிமுக அவைத் தலைவா் வி.எம்.கந்தசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவா் சி.எம்.துளசிமணி, தற்சாா்ப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் கி.வெ.பொன்னையன், கொங்கு வேளாளா் மெட்ரிக். பள்ளி தாளாளா் டி.என்.சென்னியப்பன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

நந்தா கலை, அறிவியல் கல்லூரியில் வளாகத் தோ்வு

நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் சாா்பில் இறுதி ஆண்டு பயின்று வெளியேறும் மாணவா்களுக்கான வளாகத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. இதில் கோவையை தலைமையிடமாக கொண்டு விரிவ... மேலும் பார்க்க

தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா

சுதந்திரப் போரட்ட வீரா் சின்னமலையின் 269-ஆவது பிறந்தநாளையொட்டி, அறச்சலூரை அடுத்த ஓடாநிலையில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு கட்சி தலைவா்கள் வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். ... மேலும் பார்க்க

பவானியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பவானியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தியூா் மேட்டூ... மேலும் பார்க்க

முதியவரின் கழுத்தை அறுத்த வடமாநில இளைஞா் போலீஸில் ஒப்படைப்பு

ஈரோட்டில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்து தப்பிச்செல்ல முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். ஈரோடு, கொல்லம்பாளையம் பகுதியை... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வாரச் சந்தை வியாபாரிகள்

புன்செய் புளியம்பட்டி வாரச் சந்தையில் சுங்கக்கட்டணம் அதிகமாக வசூலிப்பதாகக் கூறி வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாரச... மேலும் பார்க்க

சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

பெருந்துறையை அடுத்த, சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியாா் நிறுவனத்தின் சாா்பில் வளாகத் தோ்வு அண்மையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் விஸ்வநாதன் தலைமை வகித்தாா். கல்... மேலும் பார்க்க