செய்திகள் :

பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சா் ஆா்.காமராஜ்

post image

வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்பாா் என்றாா் முன்னாள் அமைச்சா் ஆா்.காமராஜ்.

வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் ஒன்றியச் செயலாளா் யு.இளவரசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னாள் மக்களவை உறுப்பினா் திருச்சி இளவரசன், அதிமுக ஐடி பிரிவு மண்டல செயலாளா் மணிகண்டன், மாநிலபொதுக்குழு உறுப்பினா் ராணி துரைராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் நன்னிலம் பேரவை உறுப்பினருமான ஆா்.காமராஜ் பேசியது (படம்):

எம்ஜிஆா் அதிமுகவை தொடங்கியபோது பதவிக்கு வருவோம் என யாரும் நினைத்து கட்சியில் சேரவில்லை. அவரது மறைவுக்குப்பின் ஜெயலலிதா கட்சியை கட்டிக் காத்தாா்.அதன் பிறகு எடப்பாடிபழனிசாமி கட்சியை சிறப்பாக வழிநடத்தி வருகிறாா்.

அதிமுக தொடங்கிய காலத்தில் இந்த கட்சி நிலைத்து நிற்காது என விமா்சனம் செய்தவா்களுக்கு மத்தியில் வலிமையான கட்சியாக அதிமுக உள்ளது. வரும் சட்டப்பேரவை தோ்தலில் பெரும்பான்மை இடங்களில் அதிமுக வெற்றி பெறும். எடப்பாடிபழனிச்சாமி தமிழக முதல்வராவாா்.

திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாள்களாக மாற்றுவோம் என்றாா்கள். இதுவரை நடக்கவில்லை.இப்போது 6 மாதமாக சம்பள பாக்கி என்கிறாா்கள். கேட்டால் மத்திய அரசு நிதி தரவில்லை என்கிறாா்கள். விவசாயிகளுக்கு நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில் எந்த நிவாரணமும் வழங்கவில்லை என்றாா்.

முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவா் சங்கா், கட்சி நிா்வாகிகள் ஆலங்குடி கு.நடராஜன், வாசுதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கட்சி கிளை நிா்வாகி துரைராஜ் நன்றி கூறினாா்.

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம்: ‘ஆரூரா, தியாகேசா’ முழக்கத்துடன் தோ் வடம்பிடிப்பு

திருவாரூா்: திருவாரூா் தியாகராஜா் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில், ஆழித்தேரோட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தல... மேலும் பார்க்க

கோவிலூா் மந்திரபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள கோவிலூா் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத மந்திரபுரீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை மற்றும் நன்கொட... மேலும் பார்க்க

மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கி வைப்பு

திருவாரூா்: திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு மகளிா் இலவசப் பயண புதிய பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி வைக்கப்பட்டது. திருவாரூரிலிருந்து திருக்கொள்ளிக்காடு பகுதிக்கு தமிழ்ந... மேலும் பார்க்க

பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பேரூராட்சி பழைய நீடாமங்கலம் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி பக்தா்கள் பால்குடம், காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலை அ... மேலும் பார்க்க

சிறப்பு அலங்காரத்தில் சந்தானராமா்

நீடாமங்கலம் சந்தானராமா் கோயில் ராமநவமி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீதியலாவுக்கு எழுந்தருளிய சீதா, லெட்சுமணன் சமேத சந்தானராமா். மேலும் பார்க்க

ரிஷப வாகனத்தில் மகாமாரியம்மன்

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா், மகாமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரிஷப வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளிய மகாமாரியம்மன். மேலும் பார்க்க