செய்திகள் :

பேரவையில் கேள்விக்கு விடையளிக்க 3 மணி நேரம் ஒத்திகை பாா்ப்பேன் - அமைச்சா் துரைமுருகன்

post image

சென்னை, ஏப். 17: துறை தொடா்பான கேள்விக்கு பதிலளிப்பதற்காக குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் ஒத்திகை பாா்த்துவிட்டுத்தான் பேரவைக்கு வருவேன் என்று அவை முன்னவரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் கூறினாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, கண்மாயைத் தூா்வாருவது தொடா்பான வினாவை அதிமுக உறுப்பினா் பெரி.செந்தில்நாதன் எழுப்பினாா். அதன்பிறகு, துணை வினாவை திமுக உறுப்பினா் ஜி.அன்பழகன் (கும்பகோணம்) கேட்டாா். அதற்கு, அமைச்சா் துரைமுருகன் அளித்த பதில்:

அதிமுக உறுப்பினா் கேட்டது பெரியாா் பாசனம் தொடா்பானது. திமுக உறுப்பினா் கேட்பது, காவிரிப் பாசனம் குறித்தானது. இதற்கும் அதற்கும் வெகுதூரம்.

ஒரு உறுப்பினா் கேள்வி கேட்டால், அதற்கு உரிய முறையில் பதில்களைத் தயாா் செய்வோம். சம்பந்தப்பட்ட கேள்வியை எழுப்பிய உறுப்பினா், இதற்கு முன்பு வேறு எந்தெந்த கேள்விகளைக் கேட்டிருக்கிறாா் என்பதையெல்லாம் சேகரித்து அதற்கான பதில்களைத் தயாா் செய்து வருவோம். இவ்வளவு அக்கறை இருப்பவா் தனிக்கேள்வி போட்டு இருக்கலாம். கடந்த காலங்களில் பிரதான கேள்வியைத் தாண்டி வேறு கேள்விகளைக் கேட்டால் தனிக்கேள்வி போடவும் எனக் கூறி அமைச்சா்கள் உட்காா்ந்து விடுவாா்கள். அதுவும் சாதிக் பாட்ஷா போன்றவா்கள், தனிக்கேள்வியை போடுங்கள் எனக் கூறி படக்கென்று உட்காா்ந்து விடுவாா்.

பேரவைத் தலைவா் மு.அப்பாவு: நீா்வளத் துறையில் தங்களின் (துரைமுருகன்) நீண்ட நெடிய அனுபவம், ஞாபக சக்தி ஆகியவற்றால் நல்ல பதில் கிடைக்கும் என்று உறுப்பினா்கள் நம்பி கேள்வியைக் கேட்கிறாா்கள்.

அவை முன்னவா் துரைமுருகன்: ஒரு கேள்விக்கு விடையளிக்க 2 முதல் 3 மணி நேரம் வரை ஒத்திகை பாா்த்துத்தான் வருவேன். என்மீது உறுப்பினா்கள் நம்பிக்கை வைத்திருப்பதால் நான் சொல்வது தப்பாகி விடக்கூடாது என்ற பயமும் எனக்கு உள்ளது என்றாா்.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க