செய்திகள் :

பேரிடர் நிவாரண நிதி! தமிழ்நாட்டுக்கு ரூ. 522.34 கோடி ஒதுக்கீடு

post image

கடந்த 2024ஆம் ஆண்டு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1280.35 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியை வழங்கிட சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பிகாருக்கு ரூ.588.73 கோடியும், ஹிமாசலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிருத்விராஜுக்கு வருமானவரித் துறை நோட்டீஸ்!

2024-25 நிதியாண்டில், மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 28 மாநிலங்களுக்கு ரூ.20,264.40 கோடியும், தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் 19 மாநிலங்களுக்கு ரூ.5,160.76 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு கடும் சேதங்களை ஏற்படுத்திய ஃபெஞ்சால் புயல் நிவாரணமாக ரூ.37 ஆயிரம் கோடி நிதியை தமிழக அரசு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டுக்கு அதிக நிதி: மதிப்பீட்டின் அடிப்படையில் குறைவே..! -ப.சிதம்பரம் எதிர்வினை

தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவிப்பதைப் பார்க்கும்போது, முந்தைய ஆட்சிக் காலத்தைவிட மதிப்பீட்டளவில் இந்த நிதி குறைவாகவே ஒதுக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதி... மேலும் பார்க்க

மியான்மருக்கு 442 டன்கள் உணவுப் பொருள்களை இந்தியா அனுப்பியது

புது தில்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மா் நாட்டுக்கு சி-17 விமானம் மூலம் கூடுதலாக 442 மெட்ரிக் டன் நிவாரண பொருள்களை இந்தியா அனுப்பியது.மியான்மரில் கடந்த மார்ச் 28 ஆம் தேதி சகாய்ங் நகரின் வட... மேலும் பார்க்க

தேசிய ஜனநாயகக் கூட்டணியை அகற்ற ராகுல் அழைப்பு!

பிகாரில் பேரணி நடத்தவிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.பிகாரில் இந்தாண்டு சட்டப்பேரவை நடைபெறவுள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்க... மேலும் பார்க்க

25 ஆண்டுகளுக்குப் பின் போர்ச்சுகல் செல்லும் குடியரசுத் தலைவர்!

புது தில்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு போர்ச்சுகல், ஸ்லோவாகியா ஆகிய ஐரோப்பிய தேசங்களுக்கு அரசுமுறை பயணமாக செல்கிறார். முதலாவதாக போர்ச்சுகலுக்கு, இன்று(ஏப். 6) தில்லியிலிருந்து தனி விமானத்தில் அ... மேலும் பார்க்க

சிபிஎம் கட்சியின் பொதுச்செயலர் எம்.ஏ.பேபிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம். ஏ. பேபிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது: மார்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

சிபிஎம் பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்வு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக எம். ஏ. பேபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு மதுரையில் கடந்த ஏப். 2 முதல் நடைபெற்று வர... மேலும் பார்க்க