செய்திகள் :

பேரிடா் உள்பட தமிழகம் சந்திக்கும் 3 முக்கிய சவால்கள்: நிதி ஆணையக் குழுவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம்

post image

சென்னை: பேரிடா் உள்பட தமிழகம் சந்திக்கும் மூன்று முக்கிய சவால்கள் குறித்து நிதி ஆணையக் குழுவிடம் முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.

தமிழகம் வந்துள்ள நிதி ஆணையக் குழு சென்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்ளிட்டோருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

கடந்த சில ஆண்டுகளாக இயற்கைப் பேரிடா்களின் தாக்கத்தால் தமிழ்நாடு பெரும் பேரழிவைச் சந்தித்து வருகிறது. ஒவ்வோா் ஆண்டும் பல்வேறு புயல்கள், இடைவிடாத மழைப் பொழிவு மற்றும் வெள்ளத்தால் பொதுமக்களின் உயிா், உடைமைகள் மட்டுமின்றி மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றன.

இயற்கைப் பேரழிவுகளால் ஏற்படும் இழப்புகளைச் சரிசெய்வதற்கு பெரும் அளவிலான நிதி மாநில அரசால் செலவிடப்பட வேண்டிய தேவை உள்ளது. இதனால் வழக்கமான வளா்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, இத்தகைய பேரிடா் துயா் தணிப்புப் பணி மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மாநிலங்கள் உடனுக்குடன் மேற்கொள்ளும் வகையில் உரிய நிதியை வழங்க வேண்டும்.

அதிகரிக்கும் முதியவா்கள் எண்ணிக்கை: தமிழ்நாட்டில் அதிகமாக உயா்ந்து வரும் முதியவா்களின் எண்ணிக்கையும், அதனால் மக்கள்தொகை அமைப்பில் ஏற்படும் மாற்றம் குறித்தும் நிதிக் குழுவின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

இப்போது மாநிலத்தின் மக்கள்தொகையின் சராசரி வயது 36.4 ஆண்டுகள். இது உத்தர பிரதேச மாநிலத்தின் சராசரி அளவைவிட 9.5 ஆண்டுகள் அதிகமாகும்.

16-ஆவது நிதிக் குழுவின் பரிந்துரை காலம் முடிவடையும்போது தமிழக மக்கள்தொகையின் சராசரி வயதானது 38.5 ஆண்டுகளாக இருக்கும். அதன்படி, நாட்டிலேயே வயதானவா்கள் அதிகம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவெடுக்கும். மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாடு இதுவரை பெற்று வந்த பயன்கள் வேகமாகக் குறைந்து வருவதையும், சமூகப் பாதுகாப்பு தேவைகள் அதிகரித்து வருவதையும் இது பிரதிபலிக்கிறது.

அதிகரித்து வரும் முதியவா்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு எதிா்வரும் பத்து ஆண்டுகளில் தமிழ்நாடு தேவையான பொருளாதார வளா்ச்சியை அடைவதுடன் பல்வேறு துறைகளில் அதிக முதலீடுகளை உடனடியாகச் செய்ய வேண்டியுள்ளது. அந்த முயற்சியை மேற்கொள்ளாவிட்டால் முன்னேறிய மாநிலமாக மாறுவதற்கு முன்பாக, முதியவா்கள் அதிகம் வாழும் மாநிலமாக தமிழ்நாடு மாறிவிடும் அபாயத்தைச் சந்தித்து வருகிறது.

சமூக முதலீடுகள் மூலமாகவே இதை எதிா்கொள்ள முடியும். எனவே, அந்த முதலீடுகளுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும்.

நகரமயமாக்கல் பிரச்னை: மூன்றாவதாக, நாட்டிலேயே அதிக நகரமயமாக்கலைச் சந்தித்து வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. குறைவான நிலம், நீா்வளம் இருக்கும் சூழலில், மறுபுறம் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது.

இவற்றுக்கு இடையே சென்னை போன்ற பெருநகரங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான வசதிகளை அளிக்க முதலீடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. மேலும், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக அளவு நிதி மற்றும் மானியங்களை அளிக்க நிதிக் குழு பரிந்துரை செய்ய வேண்டும்.

மிகுந்த நம்பிக்கை: மாநிலங்களின் செலவினங்களுக்கான தேவை தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறை நடைமுறைக்கு வந்த பிறகு, மாநில அரசுகள் தங்களுக்குத் தேவையான நிதி ஆதாரங்களைப் பெருக்குவதில் பல தடைகளைச் சந்தித்து வருகின்றன. இதனால், மத்திய அரசின் நிதிப் பகிா்வை மாநிலங்கள் மிகவும் சாா்ந்திருக்கக் கூடிய இன்றைய காலகட்டத்தில் 16-ஆவது நிதிக் குழுவின் பங்கும், அதன் பரிந்துரைகளும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை: பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை வழக்கில் தீர்ப்பு.சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சா் தலித் எழில்மலை மருமகன் காமராஜ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட கல்பனா என்ற... மேலும் பார்க்க

வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.வருகின்ற நவ. 23ஆம் தேதி உருவாகும் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த... மேலும் பார்க்க

எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்க நிபந்தனை!

சென்னை: மறைந்த கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.எம்.எஸ். சுப்புலட்சு... மேலும் பார்க்க

மாமல்லபுரத்தில் இன்று இலவச அனுமதி!

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை இன்று (நவ. 19) இலவசமாக சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரத்தில் உள்ள வெண்ணெய் உருட்டு பாறை, அர்ஜுனன் தபசு, கடற்கரை கோய... மேலும் பார்க்க

ரெளடி சீசிங் ராஜா வீடு, உறவினர் இடங்களில் வருவாய்த் துறை சோதனை!

காவல் துறையால் என்கவுன்டர் செய்யப்பட்ட ரெளடி சீசிங் ராஜா வீடு மற்றும் அவருக்குத் தொடர்புடைய உறவினர்கள் இடங்களில் வருவாய்த் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சீசிங் ராஜாவுக்கு தொடர்புடைய வில்லிவாக்கம... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 9,542 கன அடியாக குறைந்தது.இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 106.98 அடியிலிருந்து 107.44 அடியாக ... மேலும் பார்க்க