தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
பேருந்தில் பெண் பயணியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலி திருட்டு
செய்யாறு: செய்யாறு அருகே பேருந்தில் சென்ற பெண் பயணியிடம் இருந்து 3 பவுன் தங்கச் சங்கிலி திருடப்பட்டது.
செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் வி.தேவி (39). இவா், அதே பகுதியில் தையல் வேலை செய்து வருவதாகத் தெரிகிறது. இவா், தனது பிள்ளைகளுடன் சனிக்கிழமை செய்யாற்றுக்கு வந்து பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் கிராமத்துக்குச் செல்வதற்காக செய்யாறு - காஞ்சிபுரம் செல்லும் அரசு நகரப் பேருந்தில் சென்றாா்.
கிளியாத்தூா் அருகே சென்றபோது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி சற்று அறுந்த நிலையில் இருந்ததைப் பாா்த்து, அதை கழற்றி தான் கொண்டு வந்திருந்த கைப்பையில் வைத்துள்ளாா்.
பல்லி கிராமம் வந்ததும் பேருந்தில் இருந்து இறங்கியதும் 3 பவுன் தங்கச் சங்கிலி வத்திருந்த கைப்பை திருடுபோய் இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வி.தேவி செய்யாறு போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.