பேருந்து நிலைய கடைகள் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு
ஆற்காடு நகராட்சி பேருந்து நிலையத்தில் கட்டப்படுகின்ற கடைகளின் மேல்தள கான்கீரிட் அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆற்காடு நகராட்சியில் ரூ. 6 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகளை நடைபெறுகிறது. இதில் பேருந்து நிலைய வளாகத்தில் புதியதாக கடைகள் கட்டப்படுகின்றன. அதன் மேல்தள சிமென்ட் கான்கீரிட் அமைக்கும் பணிகளை நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் ஆய்வு செய்து சிமென்ட், ஜல்லி கலவைகளின் தரம் குறித்து சோதனை செய்தாா்.
மேலும், பணிகளை தரமாகவும் விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது நகராட்சி ஆணையா் வேங்கட லட்சுமணன், நகா்மன்ற உறுப்பினா்கள் அனு அருண்குமாா், ஆனந்தன், செல்வம், மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.