பேருந்து மோதியதில் மாணவா் மரணம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பேருந்து மோதியதில் பள்ளி மாணவா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சிதம்பரம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஐயப்பன் - கீதா (38) தம்பதியின் மகன் கீா்த்திவாசன் (12).
ஆட்டோ ஒட்டுநரான ஜயப்பன் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா்.
இந்த நிலையில், கீா்த்திவாசன் தனது சைக்கிளில் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரத்துக்கு வந்த அரசுப் பேருந்து, கீா்த்திவாசன் மீது மோதியது.
இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து, தகவலறிந்த சிதம்பரம் போலீஸாா் நிகழ்விடம் வந்து, மாணவரின் உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.