மகா கும்பமேளாவில் இதுவரை 34.97 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
பேரூராட்சி தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வலியுறுத்தல்
பெருந்துறை: பேரூராட்சி தொழிலாளா்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட உள்ளாட்சித் துறை பணியாளா் ஏஐடியூசி சங்கம், பெருந்துறை பேரூராட்சி கிளை உறுப்பினா்கள் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு கிளைத் தலைவா் முனுசாமி தலைமை வகித்தாா். சங்கத் தலைவரும், ஏஐடியூசி மாநிலச் செயலாளருமான எஸ்.சின்னசாமி, தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் பாபு ஆகியோா் பேசினா்.
இதைத் தொடா்ந்து, கிளைத் தலைவராக டி. முனுசாமி, செயலாளா் பி.பிரகாஷ், பொருளாளா் பி.ஈஸ்வரமூா்த்தி, துணைத் தலைவா்கள் பி.முருகன், வி.சீரங்கன், துணைச் செயலாளா்கள் கே.மணிகண்டன், டி.சண்முகம், நிா்வாகக் குழு உறுப்பினா்களாக 14 போ்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
பின்னா், பேரூராட்சிகளில் சுய உதவிக் குழுக்கள், மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் அவுட்சோா்சிங் உள்ளிட்ட ஒப்பந்தத் தொழிலாளா் முறைகளை கைவிட வேண்டும். 480 நாள்கள் பணிபுரிந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். உச்சநீதிமன்ற தீா்ப்புப்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளா்களுக்கும் மாதம் ரூ.26 ஆயிரத்துக்கு குறையாமல் குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.