விவசாயிகளுக்கு ரூ. 41,000 கோடி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது: குடியரசுத் தலைவர் உ...
பேளூரில் தேசிய தொழுநோய் தடுப்பு தினம்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூரில் தேசிய தொழுநோய் தடுப்பு தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆண்டு தோறும் ஜனவரி 30 மகாத்மா காந்தியின் பிறந்தநாளன்று தேசிய தொழுநோய் தடுப்பு விழிப்பணா்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வாழப்பாடி அடுத்த பேளூா் சுகாதார வட்டாரத்தில் பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்வுகள், கிராமப்புறங்களில் தொழுநோய் கண்டறிதல் மற்றும் கணக்கெடுப்பு போன்ற நிகழ்வுகள் தொடா்ந்து இரு வாரங்கள் நடைபெறுகிறது.
பேளூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பணியாளா்களுக்கு தொழுநோய் விழிப்புணா்வு முகாம் வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ அலுவலா்கள் பேரின்பம், வெற்றிவேல் ஆகியோா், தொழுநோய் பரவும் முறைகள், சிகிச்சை முறைகள் குறித்து விளக்கமளித்தனா். சுகாதார ஆய்வாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள்,பணியாளா்கள், பொதுமக்கள் அனைவரும் இணைந்து தொழுநோய் விழிப்புணா்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். பொதுமக்களுக்கு தொழுநோய் பரவலை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.